அண்ணா காலத்தில் தமிழ் வளரவில்லை ஆண்டாள் காலத்தில் தான் தமிழ் வளர்ந்தது; பெரியார் தமிழை போற்றவில்லை பெரிய ஆழ்வார் தான் தமிழைப் போற்றினார் என தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
வேலூர் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த முன்னாள் தெலுங்கானா ஆளுநர் மற்றும் முன்னாள் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நான் எப்படி வேலூருக்கு வந்து வந்துள்ளனே அதேபோல் தமிழக அரசாங்கம் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கொண்டுள்ளது. நான்காண்டு காலமாக வீட்டில் உள்ள பிரச்சனை நாட்டில் உள்ள பிரச்சனை எல்லாம் பார்க்காமல் தமிழக அரசாங்கம் வீட்டிற்கு போகுது என்று உங்களுடன் ஸ்டாலின் என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இன்றைக்கு அதிமுக சார்பில் கூட வழக்கு போட்டு உள்ளனர். ஏனென்றால் உங்களுடன் ஸ்டாலின் என திட்டத்தை போட்டு அரசாங்க பணத்தை பல கோடி ரூபாய் திமுக பிரச்சாரத்திற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது
முன்னாள் முதல்வர் கலைஞரின் படம் ஸ்டாலின் அவர்களின் படம் மட்டுமல்லாமல் அரசாங்கத்தின் செலவில் அரசாங்க விழாவாக மக்களுக்கு சேவை செய்வதற்காக அவசர அவசரமாக நான்கு ஆண்டுகளில் செய்ய முடியாததை 45 நாட்களில் செய்ய முடியும் எனக் கூறுகிறார்கள். 45 நாட்களில் செய்ய முடிவதை ஏன் நான்காண்டுகளில் மக்களுக்கு செய்யவில்லை. அப்படி என்றால் உங்களுக்கு மனது வரவில்லையா? ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக மக்களைப் பற்றி சிந்திப்பீர்களா?. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திலும் ஊழல் உள்ளது அதிகாரிகள் பொது மக்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கு கையூட்டு வாங்கி உள்ளார்கள். அங்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் மக்களுக்கான அடிப்படை வசதிகள் அங்கே செய்யப்படவில்லை. இதன் மூலம் அரசாங்க அதிகாரிகளை பிரச்சாரத்தில் ஈடுபட வைத்து ஒரு தவறான ஒரு தவறான சூழல் தமிழகத்தில் நிலவிக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: "ப" வடிவ இருக்கை இங்க சரிப்பட்டு வராது.. திமுக அரசுக்கு தமிழிசை வலியுறுத்துவது என்ன..?
வரும் 27ஆம் தேதி பாரத பிரதமர் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருவதை நாங்கள் மிகப் பெருமையாக கருதுகிறோம். சோழ கங்கத்தை பற்றி உணர்த்துவதற்கு பாரத பிரதமரின் வருகை தேவைப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பெருமையை தமிழக முதலமைச்சரை விட பாரதப் பிரதமர் உலகிற்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியும் பிரதமரும் தமிழுக்கு எதிரானவர்கள் என்ற தோற்றத்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஏற்படுத்தி வருகிறது
அண்ணா காலத்தில் தமிழ் வளரவில்லை ஆண்டாள் காலத்தில் தான் தமிழ் வளர்ந்தது. பெரியார் தமிழை போற்றவில்லை பெரிய ஆழ்வார் தான் தமிழைப் போற்றினார்.
பெரியார் தான் தமிழைத் தூற்றினார் ஆனால் பெரியாரும் அண்ணாவும் தமிழை வளர்த்தது போலவும் ஆன்மீகத்திற்கும் தமிழுக்கும் சம்பந்தமில்லை போலவும் தோற்றத்தை இவர்கள் ஏற்படுத்தி வருகின்றனர் இனிமேல் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம்.
பிரதமரின் வருகை எங்களுக்கு ஒரு புத்துயிர்ச்சியை தரும், வட மாநிலத்தவர் தென் மாநிலத்தவர் என பிரித்துப் பார்க்கும் அரசியல் இனி எடுபடாது. இந்த காலகட்டத்தில் மரியாதைக்குரிய காமராஜர் போன்றவர்களும் இழிவுபடுத்தப்படுகிறார்கள். கலைஞருக்கும் தமிழக முதல்வருக்கும் எல்லா புகழும் வரவேண்டும் என மற்ற தலைவர்களை இழிவுபடுத்தும் சூழ்ச்சியை திராவிட முன்னேற்ற கழகம் ஏற்படுத்தி வருகிறது. வன்மையான கண்டனத்தை நான் பதிவு செய்கிறேன்.
பிஜேபியும் அதிமுகவும் இணைந்து விடுகிறார்கள் என இந்தியா கூட்டணி எதையாவது சொல்லிக் கொண்டுள்ளனர். அமித் ஷாவும் எடப்பாடியும் இந்த கூட்டணி எப்படி எடுத்துச் செல்லப்படுகிறது என்பதை தெளிவாக கூறியுள்ளனர். இந்த கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். வெற்றி பெறும் முன்பும் யாருக்கு எத்தனை இடம் என்பது வெற்றிப்பெற்ற பின்பும் அதனை அவர்கள் முடிவு செய்வார்கள். ஆனால் திமுகவில் அந்த தெளிவு உள்ளதா? திருமாவளவன் கூறுகிறார் நான்கு ஓட்டுகள் இருந்தால் அதில் ஒரு ஓட்டு எங்களுடையது என்கிறார். அங்கு அவர்கள் தெளிவாக உள்ளார்களா நாங்கள் தெளிவாக உள்ளோம். டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 பல முறைகேடுகள் நடந்திருப்பதாக தனக்கும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த தேர்வில் தவறான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களுக்கு இளைஞர்களுக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியில் உதான் திட்டத்தில் விமான நிலையம் திறப்பதை போல வேலூரிலும் விரைவில் விமான நிலையம் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: துளிக்கூட மக்கள் மேல அக்கறையே இல்லை.. திமுக அரசை கடுமையாக சாடிய தமிழிசை..!