வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை நான் மேற்கொண்டேன். மன நிறைவோடு நான் திரும்பி இருக்கிறேன். இந்த பயணத்தை பொறுத்தவரையில் மாபெரும் வெற்றி பயணமாக அமைந்திருக்கிறது. மொத்தம் 15,516 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் அதாவது 15,516 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து 17,613 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய வகையிl 33 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மீது நம்பிக்கை வைத்து 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்காக முன் வந்திருக்காங்க. உயர்கல்வி, சிறுதொழில் போன்ற துறைகளில் ஆறு அமைப்புகள் நம்மோடு இணைந்து கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள இருக்காங்க.
ஏற்கனவே இருக்கக்கூடிய 17 நிறுவனங்களும் மத்த மாநிலங்களை நோக்கி போகாம நம்ம மாநிலத்திலே தங்களுடைய தொழிலை மேலும் விரிவுபடுத்து முடிவு செய்துள்ளனர். நான் புறப்படுவதற்கு முன்பே என்னுடைய இந்த ஒட்டுமொத்த பயணத்தை முறைப்படுத்துவதற்காக மிக சிறப்பாக ஒருங்கிணைச்சி அந்த பணியை வெற்றி வெற்றிகரமாக நடத்திய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கு முதல்ல நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேபோல அவருக்கு துணையாக இருந்த அதிகாரிகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நான் தெரிவிச்சுக்கிறேன். தொழில் துறை அமைச்சரை பொறுத்தவரைக்கும் ஒரு துடிப்பான தொழில்துறை அமைச்சராக நம்முடைய ராஜா அத இந்த பயணத்தின் மூலமாக ப்ரூப் பண்ணி இருக்கிறாரு. கடந்த நாலரை ஆண்டு காலத்தில மேற்கொண்டிருக்கக்கூடிய என்னுடைய பயணங்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக இந்த பயணம் அமைஞ்சதுன்னு சொன்னா அது மிகையாகாது. இந்த வெளிநாட்டு பயணத்தில் மிக அதிக அளவிலான முதலீட்டுகள் ஈர்க்கப்பட்டிருக்கு என்பதையும் மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதையும் படிங்க: தமிழகம் திரும்பினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.. ரூ.15,516 கோடி முதலீடுகளுடன் வெற்றிகரமான பயணம்..!!
ஆயிரம் ஆண்டுகள் பழமையான உலகின் முதன்மையான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாருடைய திருவுருவ படத்தை திறந்து வைத்தது என் பெருமைக்கு காரணம். அதுமட்டுமல்ல சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு கருத்தரங்கத்திலயும் நம்ம கடந்து வந்த பாதையையும் இனி அடைய வேண்டிய இலக்குகளையும் விளக்கமாக நான் அந்த நிகழ்ச்சியில பேசி இருக்கிறேன். அதோட அயலக தமிழர்கள் சந்திப்பு கூட்டங்களில் உரையாற்றியது, சோயாஸ் பல்கலைக்கழக மாணவர் கிட்ட திராவிட மாடல் பற்றி பேசியது, லண்டன்ல இருக்கக்கூடிய பொதுவுடமை தத்துவ மாமேதை காரல் மார்க்ஸ் நினைவிடம், சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்ந்த இல்லம், அதேபோல தமிழ் காதலர் ஜி போப் அவர்கள் நினைவிடம் போன்ற இடங்களுக்கு எல்லாம் சென்று பல பெருமைகளோடு நான் திரும்பி இருக்கிறேன். முதலீடுகளை ஈர்க்கச் சென்ற முதலமைச்சராக மட்டுமல்ல பெரியாரின் பேரனாக, திராவிட இயக்கத்தை சார்ந்த தலைவராக, சுயமரியாதை உள்ள ஒரு தமிழனாக இந்த பயணம் எல்லா வகையிலும் எனக்கு பர்சனலா மறக்க முடியாத பயணமாக அமைந்தது என்றார்.
இதையும் படிங்க: லண்டனில் பென்னிகுயிக் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின்..!! நெகிழ்ச்சி பதிவு..!!