நாளை தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான திரு முகா ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுகாவினுடைய மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற இருக்கிறது. காணொளி காட்சியின் வாயிலாக இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. நாளை 12 மணிக்கு இந்த கூட்டம் காணொளி காட்சியின் வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக மாவட்ட செயலாளர்களை சந்திக்கவுள்ளார். 2026 தேர்தலுக்கு தயாராகும் வகையில், ஓரணியில் தமிழ்நாடு என்ற அடிப்படையில் தமிழகம் முழுக்க புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி, அதேபோல பழைய உறுப்பினர்களை புதுப்பித்தல் என இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதன் அடிப்படையிலே இதுவரை கிட்டத்தட்ட நான்கு கூட்டம் நடைபெற்றிருக்கிறது. மூன்று கூட்டம் காணொளி காட்சி வாயிலாகவும் அதேபோல ஒரு கூட்டம் நேரடியாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தியிருக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் உறுப்பினர் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக ஐந்து கேள்விகள் அடக்கிய ஒரு மனு கொடுக்கப்பட்டு அதில் திமுகவினுடைய ஆட்சியினுடைய சாதனைகளை எடுத்து கூறும் வகையில் பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப்பட்டு இது எல்லாம் உங்களுக்கு மீண்டும் கிடைக்க, தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமாக மு.க. ஸ்டான் அவர்கள் தலைமையில் ஆட்சியை 2026ல் உறுதிப்படுத்துவீர்களா? என்ற ஒரு கேள்வி கேட்கப்படும் அதற்கு அவர்கள் சரி என்று டிக்கடித்த பிறகு அவர்கள் உறுப்பினராக சேர்த்து கொள்ளப்படுவார்கள்.
அதன் அடிப்படையில் தான் தொடர்ச்சியாக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரத்தின் வாயிலாக இதுவரை இரண்டு கோடி பேர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் தொடர்ச்சியாக ஒவ்வொரு வட்டம் வாரியாக கிட்டத்தட்ட மாவட்ட செயலாளர்கள் முதல் வட்ட செயலாளர்கள் வரை தனித்தனி அணிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வீடுகளுக்கு சென்றும் நேரடியாக திமுக அரசின் நான்கரை ஆண்டு சாதனைகளை சொல்லியும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு; 17,613 பேருக்கு வேலை வாய்ப்பு... வெற்றிப்பயணமாக அமைந்த முதல்வர் சுற்றுப்பயணம்...!
அதன் அடிப்படையில் முதலமைச்சர்கள் நாளைய தினம் அவர்களிடம் கலந்து ஆலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் தொகுதியுடைய பாதுகாவல் கூட்டம் காணொளி காட்சி நடைபெற்றது. தற்போது 4வது முறையாக ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரம் தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
மேலும் தொடர்ச்சியாக வருகின்ற 17 ஆம் தேதி திமுகவினுடைய முப்பெரும் விழா கரூரில் நடைபெறுகிறது. திமுக துவக்க விழா, பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, தந்தை பெரியார் பிறந்தநாள் விழா என மூன்று விழாக்களையும் சேர்த்து முப்பெரும் விழாவாக கொண்டாடவுள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை இந்த விழாநடைபெறும். அதன் அடிப்படையிலே வருகின்ற 17 ஆம் தேதி நடைபெறும் இந்த மாநாடு குறித்தும் முதலமைச்சர் மாவட்ட செயலாளர்களிடம் கலந்தாலோசிப்பார் எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகம் திரும்பினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.. ரூ.15,516 கோடி முதலீடுகளுடன் வெற்றிகரமான பயணம்..!!