சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த சுமார் 2,800 மாற்றுக்கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், 1949யில் தொடங்கப்பட்ட நம்முடைய இயக்கம் 1957யில் தான் தேர்தல் களத்தில போய் முதல் முதலாக நின்றோம். திராவிட முன்னேற்றக்கழகம் என்பது மக்களுக்காக இன்னும் சொல்லணும்னு சொன்னா இந்த இயக்கம் தொடங்கப்பட்டபோது ஏதோ ஆட்சிக்கு வரணும், ஆட்சி பொறுப்பில் அமர்ந்திட வேண்டும், ஆட்சிதான் நம்முடைய குறிக்கோள், ஆட்சிதான் நம்முடைய லட்சியம் என்ற உணர்வோடு இந்த இயக்கம் தொடங்கப்படவில்லை. ஆனா இன்னைக்கு தொடங்கப்படும் கட்சிகள் எல்லாம் பார்க்கிறோம்.

அரசியலின் அரிச்சுவடி கூட தெரியாதவர்கள் எல்லாம் நான் தான் அடுத்த முதலமைச்சர் என்று பேசக்கூடிய நிலை எல்லாம் இருக்கு. நாம் அதை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்ல. நான் எதற்காக சொல்லுகிறேன் என்றால், சொன்னால் ஏதோ அவங்கள எல்லாம் கேவலப்படுத்தனும் கொச்சைப்படுத்தனும் என்பதற்காக சொல்லல இந்த இயக்கத்தினுடைய தொடக்கத்தை பற்றி இந்த இயக்கம் தொடங்குனது என்பதை பற்றி முதல்ல வந்து சேர்ந்திருக்கக்கூடிய நீங்கள் பலபேர் உணர்ந்திருப்பீர்கள்.
இதையும் படிங்க: கடின உழைப்பை முதலீடாக்கி முன்னேறுங்கள்..! +2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!

ஆனால் உணராதவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகதான் நினைவுபடுத்த விரும்புகிறேன். அறிஞர் அண்ணா அவர்கள் கொட்டுகின்ற மழையில வடசென்னை பகுதியில் இருக்கக்கூடிய ராபின்சன் பூங்காவிலே தொடங்கி வைத்தபோது அவர் சொன்னார். ஆட்சிக்காக பதவிக்காக அல்ல, இந்த இயக்கம் தொடங்கப்படுவது பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, விவசாய பெருங்குடி மக்களுக்காக, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அடித்தளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய மக்களுக்காக, நெசவாளர் தோழர்களுக்காக, தொழிலாளர் நண்பர்களுக்காக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த கழகம் தொடங்கப்படுகிறது எனக்கூறி இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக திருச்சியில மாநாட்டை கூட்டிய அண்ணா, கழக தொண்டர்களிடத்திலே தோழர்களிடத்திலே ஒரு பெட்டியை வைத்து தேர்தலில் நிற்கலாமா வேண்டாமா என்பதை எழுதி போடுங்கள் என்று சொன்னார். அதற்கு பிறகு நம்முடைய தோழர்கள் எல்லாம் எழுதி அந்த பெட்டியில போட்டு, அதற்கு பிறகு அந்த பெட்டியை திறந்து அந்த சீட்டை எண்ணி பார்த்தபோது தேர்தலில் நிற்கலாம் என்று அதிகம் பேர் எழுதி போட்டார்கள், ஆக அதை ஏற்றுக்கொண்டு அண்ணா அவர்கள் தேர்தலிலே நிற்க உத்தரவிட்டார். அதையடுத்து தேர்தலில் நின்றோம், 15 இடங்களில் வெற்றி பெற்றோம் சட்டமன்ற உறுப்பினராக 15 இடங்களில் வெற்றி பெற்று முதன் முதலாக சட்டமன்றத்திற்குள்ளே 1957யில் நுழைந்தோம் எனக்கூறினார்.
இதையும் படிங்க: இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு ராயல் சல்யூட்... தவெக தலைவர் விஜய் ஆதரவு!