தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் கவின் வயது 25. இவரும் நிலை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுபாஷினி என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் ஒவ்வொரு பேரும் சம்பந்தம் என்பதால் ஜூலை 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நல்ல கேடிசி நகருக்கு வந்த கவினை, சுபாஷினியின் தம்பி சுர்ஜித் வெட்டி ஆணவ கொலை செய்தார்.
இந்த ஆணவக் கொலையை கண்டித்து தற்போது நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக இன்று மாலை நெல்லைக்கு வந்த விசிக தலைவர் திருமாவளவன் முதல் கட்டமாக நெல்லை அரசு மருத்துவமனை பிணவறையில் உள்ள கவினின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பாளையங்கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து ஆணவ படுகொலையை கண்டிக்கிறோம். இதுபோன்று இனிமேல் நடக்கக்கூடாது. இந்த சம்பவத்தின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்.
இதையும் படிங்க: “இனி மேல் இதுமாதிரி நடக்கக்கூடாது...” - கவின் குடும்பத்தின் கண்ணீரைப் பார்த்து ஆவேசமான நயினார் நாகேந்திரன்...!
ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது, நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் 26ம் தேதியிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் 27ஆம் தேதி தம்பி கவின் படுகொலை செய்யப்பட்ட கொடூரம் நம்மை எல்லாம் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
நாடாளுமன்றத்திலும் தினந்தோறும் காலை போராட்டம். உள்ளேயும் போராட்டம் வெளியேயும் போராட்டம். போராட்டங்கள் ஈடுபட்டு இருக்க கூடிய எதிர்ப்பு பதிவு செய்து கொண்டிருந்த சூழல்.
இதனால் உடனடியாக அங்கிருந்து புறப்பட முடியாத ஒரு சூழல்.அதனால் முதல் கட்டமாக செல்போனில் கவின் தந்தையிடம் ஆறுதல் தெரிவித்தேன்.இன்று கவின் தந்தை தாயிடம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன்.கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.
அண்மை காலமாக இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.சாதிவிட்டு சாதி திருமணம் செய்பவர்களை ஆணவ கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சாதிவிட்டு சாதி திருமணம் செய்யக்கூடாது என்பது சனாதன தர்மம் என்று பேசினார்.
இதையும் படிங்க: ஓயாத சாதி வெறியாட்டம்! அடக்கப்படாத ஆணவ படுகொலைகள்... கொதித்துப் போன திருமா..!