தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி தமிழகத்தில் ஓராண்டு நீடித்ததாக வரலாறு இல்லை,.ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக கொள்கைக்காக உருவாக்கப்பட்டது திமுக தலைமையிலான கூட்டணி, சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எங்களுக்கு முக்கியமல்ல எனக்கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் பெரியநாயக்கன்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம் கடந்த தேர்தலை விட தற்போது நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு ஒரு தொகுதி குறைவாக கொடுக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் ஏதாவது சமரசம் செய்து கொண்டீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், எங்களை நிர்பந்தப்படுத்துவதற்கு தி.மு.க ஒன்றும் பா.ஜ.க அல்ல அடிபணிவதற்கு நாங்கள் அண்ணா திமுக அல்ல. தமிழகத்தில் திமுக தலைமையில் அமைந்திருக்கக் கூடிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பது கடந்த 10 ஆண்டு காலமாக நீடிக்கிறது.
இதையும் படிங்க: நல்லகண்ணுவுக்கு பாரத ரத்னா விருது குடுங்க... பேரிழப்பு..!! செல்வப் பெருந்தகை இரங்கல்..!!
ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணிகள் உருவாக்கப்படுகிறது அது திமுக தலைமையிலான கூட்டணியாக இருந்தாலும் சரி அண்ணா திமுக தலைமையிலான கூட்டணியாக இருந்தாலும் சரி ஓராண்டு காலத்திற்கு மேல் எந்த கூட்டணியும் நீடித்ததாக வரலாறு கிடையாது. ஆனால் தற்போது திமுக தலைமையிலான கூட்டணி எதனால் பத்தாண்டு காலம் நீடிக்கிறது.
ஏனென்றால் இது கொள்கைக்கான கூட்டணி அதனால் எங்களுக்கு தொகுதிகள் எண்ணிக்கை என்பது முக்கியமல்ல. தற்போது மதச்சார்பற்ற நிலை நீடிக்க வேண்டும் என்றால் அதற்கு எதிராக இருக்கக்கூடிய ஆர் எஸ் எஸ் அமைப்பு தமிழகத்தில் வந்து விடக்கூடாது என்ற அக்கறை எங்களுக்கு உள்ளதால் தொகுதிகளின் எண்ணிக்கை கூடுவது குறித்தோ, குறைவது குறித்தோ எங்களுக்கு கவலை இல்லை இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: தோளோடு தோள் நின்ற மகத்தான போராளி... நல்லக்கண்ணு மறைவுக்கு MP கனிமொழி இரங்கல்..!!