புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட பாலன்நகர் அருகே திமுக மருத்துவரணி சார்பில் பகுத்தறிவு சமூக நீதி மற்றும் மாநில சுயாட்சி பொதுகூட்டம் மற்றும் கருத்தரங்கில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். மேலும் இதில் தமிழ்நாடு அமைச்சர்கள் ரகுபதி, பெரியகருப்பன், மெய்ய நாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலன் முத்துராஜா திமுக மருத்துவரணி நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகளும் வினாடி வினா நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், அதிமுக அடிமைகள் மீண்டும் பழைய முதலாளிகளின் காலை தேடி பிடித்து விழுந்து விட்டனர். எடப்பாடி பழனிச்சாமி 4 மாதங்களுக்கு முன்பு 2026ல் இல்ல 2031லும் கூட்டணி கிடையாது என்று கூறினார். தற்போது கூட்டணியில் சேர்ந்துள்ளார். இப்படிப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு மீண்டும் போனால் என்ன ஆகும்?
இதையும் படிங்க: டாஸ்மாக் வழக்கு: சூனா பானா தயாநிதி மாறனே ரொம்ப ஆடாதீங்க.. பொளந்துகட்டிய ஆர்.பி. உதயகுமார்!

பத்தாண்டுகள் அதிமுக ஆட்சியில் மாநில நலன் அனைத்தையும் அடகு வைத்தனர். 2026 இல் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் அதிமுகவை எப்படி அடகு வைத்தார்களோ அதே போல் தமிழ்நாட்டையும் அவர்கள் அடகு வைத்து விடுவார்கள்.

நோயை தடுக்க இரு வழி உண்டு வருமுன் காப்பதும் மற்றொன்று நோய் வந்த பின்பு சிகிச்சை அளிப்பதும். அதனால்தான் தமிழ்நாடு முதலமைச்சர் வருமுன் காக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதனால்தான் சங்கிகளுக்கு வயிற்று எரிச்சலும் கோபமும் ஏற்படுகிறது.

யுபிஎஸ்சி தேர்வு எழுதி வெற்றி பெறும் மாணவர்கள். நீட் தேர்வை எழுத முடியவில்லை. ஏனென்றால் நீட் என்பது தேர்வு கிடையாது அது ஒரு சூழ்ச்சி, சமுதாயத்தின் நோய் பரப்பும் கிருமிகளாக சங்கீகள் செயல்பட்டு வருகின்றனர், பாஜகவின் அணிகளாக ஐடி ஈடி உள்ளது அவர்கள் தேர்தல் பணியை ஆரம்பித்துவிட்டனர், நம்மிடம் மருத்துவ பணி இளைஞர் அணிகள் உள்ளது தேர்தல் பணியை ஆரம்பிக்க வேண்டும் எனக்கூறினார்.
இதையும் படிங்க: கை நீட்டிய இடத்தில் கையெழுத்து போட்ட இபிஎஸ் சொத்து வரி பத்தி பேசலாமா! அமைச்சர் நேரு பதிலடி..!