2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி பஞ்சாப் அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் பிரியன்ஸ் ஆர்யா 6 ரன்களில் வெளியேற, பிராப்சிம்ரன்சிங் 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். மூன்றாவது வீரராக களமிறங்கிய ஜாஸ் இங்லிஷ் 12 பந்துகளில் 32 ரன்கள் குவித்தார்.

இதில் இரண்டு சிக்ஸர், 3 பவுண்டரி அடங்கும். இதனை அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் தன்னுடைய அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 34 பந்துகளில் 53 ரன்கள் அவர் சேர்த்தார். இதில் 5 பவுண்டரி, இரண்டு சிக்சர் அடங்கும். நேஹல் வதேரா 16 ரன்களும், ஷசாங் 11 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அப்போது களமிறங்கிய மார்க்கஸ் ஸ்டோனிஸ் தனது சிறப்பாக ஆடி 16 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரி என 44 ரன்கள் விளாசினார்.
இதையும் படிங்க: நாங்க ரொம்பவெறுப்புல இருக்கோம்... ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் கருத்தால் பரபரப்பு!!

இதன் மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. 207 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்கவீரர்களாக ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். கே.எல்.ராகுல் 21 பந்துகளில் 35 ரன்கள் அடித்து அவுட் ஆனார். இதேபோல் ஃபாஃப் டு பிளெசிஸ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் செதிகுல்லா அடல் மற்றும் கருண் நாயர் கூட்டணி இணைந்தது. ஆனால் இவர் ரன்களை குவிக்க தடுமாறினர். செதிகுல்லா அடல் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கருண் நாயர் 27 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் சமீர் ரிஸ்வி மிக சிறப்பாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். அவருடன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். சமீர் ரிஸ்வி 25 பந்துகளில் 5 சிக்ஸ், 3 பவுண்ட்ரி என 58 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார். மறுமுனையில் ஸ்டப்ஸ் 18 ரன்கள் அடித்திருந்தார். இதன் மூலம் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: சிறப்பான ஆட்டத்தால் RCB-ஐ சுருட்டிய SRH... 42 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி!!