திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் அந்த ஐந்து தொகுதிகளுடன் தொடர்புடைய மாநில நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அண்மையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், கரூர், பெருந்துறை, விராலிமலை ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், திமுக தரப்பில் முன்கூட்டியே தயார்படுத்தல் பணிகள் தொடங்கியுள்ளன. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தச் சந்திப்பில் ஒவ்வொரு தொகுதியின் களநிலவரம், கட்சி அமைப்புகளின் தயார்நிலை, வேட்பாளர் தேர்வு தொடர்பான ஆலோசனைகள், பிரசார உத்திகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் அனுபவங்களையும் கருத்தில் கொண்டு, இந்த முறை மிகவும் திட்டமிட்ட முறையில் களப்பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்து ஆலோசனையில் முன்வைக்கப்படுகிறது. தொகுதி வாரியான பலவீனங்கள், உள்ளூர் பிரச்சினைகள், மக்கள் மனநிலை ஆகியவை குறித்தும் நிர்வாகிகள் தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
இதையும் படிங்க: கண்ணாடி மாளிகையிலிருந்து கற்கோட்டையில் கல் எறிவது போல..! குடமுழுக்கு விவகாரம்..!! சேகர்பாபு விமர்சனம்.!!
ஸ்டாலின், அனைத்து நிலைகளிலும் கட்சித் தொண்டர்களை ஒருங்கிணைத்து வலுவான பிரசாரத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.இந்த ஆலோசனை தொடர்ந்து நடைபெறும் என்றும், தேர்தல் அறிவிப்பு வரும் முன்பே களப்பணிகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து தொகுதிகளிலும் திமுகவின் செல்வாக்கை உறுதிப்படுத்துவதற்கான உத்திகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: "இதான் நிலைமை".! கூட்டணி இல்லையென்றால் திமுக தோல்வி..! அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்.!