அதிமுகவில் உட்கட்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ள நிலையில், தற்போது அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி வைத்த முக்கியமான ஒரு கோரிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக ஒரு கட்டுரையில் தென் மாவட்டங்களில் ஓபிஎஸ், வி.கே.சசிகலா, டிடிவி தினகரனுக்கு இருக்கும் செல்வாக்கு குறித்தும், அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்து கட்சியை விட்டு வெளியேற்றி விட்டதாக குறிப்பிட்ட சமூகத்தினர் கோபத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தோம். ஏற்கனவே வி.கே.சசிகலா தரப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு ஆஃபர் போயிருக்கிறது. அதாவது நீங்களே பொதுச்செயலாளராகவும், முதலமைச்சர் வேட்பாளராகவும் இருந்து கொள்ளுங்கள், ஆனால் எங்களை கட்சிக்குள் அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் மூவர் கூட்டணி தென்மாவட்டங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். அப்படி செய்தால் அதிமுக தோல்வியைத் தழுவும். பத்து தோல்வி பழனிசாமி, 11 தோல்வி பழனிசாமி ஆவதோடு முதல்வர் நாற்காலி, பொதுச்செயலாளர் நாற்காலி என இரண்டையும் இழக்க வேண்டி வரும் என எச்சரித்திருந்ததாக கூறப்படுகிறது.
அரசியல் வட்டாரங்களிலும் ஒருங்கிணைந்த அதிமுகவே 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வெற்றியை பெற்றுத் தரும் என்றே கூறப்படுகிறது. இதனால் தான் செங்கோட்டையனும் அதிமுகவில் இருந்து பொதுக்குழு மூலம் நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமியிடம் மட்டுமல்ல, டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து அவரிடமும் செங்கோட்டையன் வைத்திருக்கிறார். செங்கோட்டையன் பேச்சில் உள்ள உண்மையை உணர்ந்த அமித் ஷாவும் இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டியதாகவே தெரிகிறது.
இதையும் படிங்க: அமித் ஷா அப்படி என்ன சொல்லிட்டாரு... காஸ்ட்லி காரில் முகத்தை மூடியபடி எஸ்கேப் ஆன எடப்பாடி ...!
சமீப காலமாக அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள் கூட தங்களது பேட்டியில், ஓபிஎஸ், டிடிவி தினகரனை மீண்டும் கூட்டணிக்குள் சேர்க்க முயன்று வருவதாக தெரிவித்தனர். இதனால் கடும் அப்செட்டிற்கு ஆளான எடப்பாடி பழனிசாமி, உடனடியாக அமித் ஷாவை சந்திக்க தீர்மானித்துள்ளார். நேற்று அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்க முடிவெடுத்துள்ளது குறித்து அமித் ஷாவிற்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி கட்சிக்குள் குழப்பம் விளைவித்தவர்களையும், துரோகம் இழைத்தவர்களையும் எக்காரணம் கொண்டும் மீண்டும் கட்சிக்குள் இணைக்க முடியாது என்பதை எடுத்துரைத்த இபிஎஸ், அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் நீங்கள் தலையிடாதீர்கள் என அமித் ஷாவிடமே நேரடியாக கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.
இதையும் படிங்க: #BREAKING பரபரக்கும் அரசியல் களம்... டெல்லியில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு...!