தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 ஏக்கர் வரை கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் முழுவதும் தள்ளுபடி என்றும், ஐந்து ஏக்கர் மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆன பின்பு அந்த வாக்குறுத்தியை நிறைவேற்றுகிறேன் என்கிற பெயரில் வெறும் 50,000 வரை கடன் வாங்கி இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு தான் முழுமையான கடன் தள்ளுபடி என்கிற ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
இது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும் அதேபோல தமிழ்நாட்டில் இருக்கும் மற்ற விவசாயிகளுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஐந்து ஏக்கர் வரை இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்த நிலையில், வெறும் 50,000 வரை கடன் வாங்கி இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு தான் தள்ளுபடி என்கிறது அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் விவசாயிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தற்போது வாக்குறுதிக்கு எதிரான ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இந்த அறிவிப்பு விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தொடர்ச்சியாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ள நிலையில், வர உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரிலும் பிரச்சனையைக் கிளப்ப தயாராகி வருகின்றன.
இதையும் படிங்க: சேலத்தில் ஓர் பொள்ளாச்சி சம்பவம்? - 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ... தவெக பிரமுகர் மீது இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு...!
இதனை முன்கூட்டியே கணித்த முதலமைச்சர் விஜய், தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசின் முதல் கூட்டத்தொடர் வருகின்ற ஜூன் 18 ஆம் தேதி தொடங்கும் போது அதிரடி அறிவிப்பை வெளியிட உள்ளாராம். பயிர்க்கடன் தள்ளுபடிக்கான சதவீதத்தை அதிகரித்து அறிவிக்க முதலமைச்சர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தலைமைச் செயலக அதிகாரிகள் தீயாய் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ”அந்த சத்தம்...” - தமிழக மக்கள் பாடும் பாட்டு கேட்கலையா விஜய் அண்ணா?... வறுத்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!