ஆகஸ்ட் 25- ஆம் தேதி மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரபத்தி பகுதியில் தவெக 2- ஆவது மாநில மாநாடு நடைபெறும் என த.வெ.க., தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதற்கு காவல்துறை பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்கக்கோரி சில நாட்களுக்கு முன்பு தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
தவெக இரண்டாவது மாநில மாநாட்டிற்கு இன்னும் முழுமையாக ஒரு மாதம் உள்ளது. அதற்கான பணிகளை தற்போது தொடங்கி நடைப்பெற்று வருகிறது. , இதற்காக 506 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடைபெறுவதற்காக 20க்கும் மேற் பட்ட இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, தற்போது மேடை மற்றும் பொதுமக்கள் அமரும் வகையில் பேரிகேட் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.
இந்த நிலையில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மதுரை சர்வேயர் காலனி பகுதியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த நேரில் சந்தித்து மாநாடு நடைபெறும் இடத்தின் வரைபடம் இடத்தின் உரிமையாளரின் ஒப்பந்த பத்திரம் மற்றும் மாநாட்டிற்கு மக்கள் வருகை எண்ணிக்கை கார் பார்க்கிங் போக்குவரத்து இடையூறு இல்லாமல் செல்வது உள்ளிட்டவை குறித்து விளக்கம் கொடுத்தார்.
இதையும் படிங்க: கழட்டி விட்ட பாஜக... அடுத்த ஆட்டத்திற்கு தயாரான ஓபிஎஸ் - நாளை முக்கிய முடிவு?
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 27ஆம் தேதி வருகிறது இதற்காக மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகளுக்கும், ஊர்வலத்திற்கும் கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
அதே போன்று 25ந் தேதி தவெக மாநாடு நடத்த உள்ளதால் அதற்கும் ஆயிரக்கணக்கான காவலர்கள் அனுப்ப வேண்டும்.வெளி மாநிலங்களில் இருந்து கூடுதல் போலீசார் பணிக்கு எடுப்பதிலும் சிரமம் உள்ளது.இது பற்றி தவெக பொது செயலாளர் ஆனந்திடம் பேசியதாக தெரிய வருகிறது. மேலும் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்து அதன் பின்பு அனுமதி வழங்குவது குறித்து தெரியவரும் என மதுரை மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது
இதையும் படிங்க: தமிழர்களின் பெருமையை அடகு வைத்திருக்கிறது திமுக அரசு.. தவெக தலைவர் விஜய் கடும் சாடல்..!!