எனக்கு ஏகப்பட்ட மிரட்டல்கள் வருகிறது மறைமுகமாக செயல்பட விடாமல் தடுக்கவும் செய்கின்றனர் ஒரு பெண்ணாய் இருந்து பல கஷ்டங்களை தாண்டி தான் வந்து இருக்கிறேன் இப்போதும் கஷ்டங்களை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எதைக் கண்டும் அஞ்சப் போவதுமில்லை ஒதுங்கி இருக்க போதும் இல்லை. அருப்புக்கோட்டையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வேல்ராஜன் அரங்கில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்து கொண்டு சேலைகள், மளிகை பொருட்கள், அரிசி ரொக்க பணம் என நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் இங்கு திருநர்களும் வந்துள்ளனர் அவர்களை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. முன்பு திருநங்கைகள் திரு நம்பிகள் என இருந்த வேற்றுமையை போக்குவதற்காக திருநர்கள் என்று அழைப்பார்கள் என முதலமைச்சர் கூறி இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும். உங்களை நினைக்கும் போது எங்களுக்கு பெருமையாக உள்ளது. நாம் அனைவரும் இணைந்து முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வோம். நம்முடைய ஆட்சி ஊழல் இல்லாத ஆட்சி மக்களுக்கான ஆட்சி நம்முடைய ஆட்சியில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்க மாட்டோம். யார் லஞ்சம் கேட்டாலும் கொடுக்கவும் கூடாது பெறவும் மாட்டார்கள்.
இதையும் படிங்க: " தமிழக வளர்ச்சிக்காக உங்களுடன்"..! முதல்வர் விஜய்க்கு ராகுல்காந்தி, EPS, சீமான் பிறந்தநாள் வாழ்த்து..!!
நம்முடைய முதலமைச்சர் பல விஷயங்களை விட்டுக் கொடுத்துதான் மக்களுக்காக வந்துள்ளார்கள். மக்களுக்கு செய்வதற்காக பல நல திட்டங்களை வைத்துள்ளார் அதற்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும் திருநர்களுக்கு கல்வியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் உங்களுக்கான அடையாள அட்டையும் வழங்கப்படும். அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக சரி செய்யப்படும். உங்களுக்காக சேவை செய்ய எப்போதும் முதலமைச்சர் தயாராக இருக்கிறார்.

நம்முடைய நிர்வாகிகளுக்கு பல கஷ்டங்கள் கொடுத்து வருகின்றனர். பொல்லாத கேலிகள் கிண்டல்கள் பழியும் சுமத்தி வருகின்றனர். அதில் குறிப்பாக எனக்கு ஏகப்பட்ட மிரட்டல்கள் வருகிறது மறைமுகமாக செயல்பட விடாமல் தடுக்கவும் செய்கின்றனர். அப்போது அங்கிருந்த தொண்டர்கள் நாங்கள் இருக்கிறோம் என கூறியதை கேட்டு அதாவது நம் கண்ணை வைத்து நம்மை குத்த முயற்சி செய்கிறார்கள். என்னுடைய நிர்வாகிகளை பற்றி எனக்குத் தெரியும் உழைத்தவர்களை பற்றி எனக்கு தெரியும். 18; வருடமாக நிர்வாகிகள் உடன் நான் இருந்திருக்கிறேன் யார் சரியாக இருப்பார்கள் என்பது எனக்கு தெரியும். சிலரின் தூண்டுதல் பெயரில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் நான் ஒருபோதும் எதையும் நம்ப மாட்டேன். நம்முடைய முதலமைச்சர் கூறியதைப் போல அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். நமக்குள் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் பிரச்சனை இருப்பது போல சித்தரிக்கப்படுகிறது. இதுதான் உண்மை அவர்களாகவே பிரச்சனையை உண்டாக்குகிறார்கள். அவர்களாகவே பேனர்களை கிழிக்கிறார்கள் அவர்களாகவே எல்லாமே செய்து கொண்டு நம் மீது பழியை சுமத்துகிறார்கள்.
நாம் யாரும் அதைக் கண்டு அஞ்சப் போவதுமில்லை ஒதுங்கி இருக்க போவதுமில்லை. மீண்டும் மீண்டும் எழுந்து வருவோம் துவண்டு விடமாட்டோம். உங்களை தூண்டிவிட்டால் நீங்கள் துவண்டு விடக்கூடாது. ஒரு விஷயத்தை உங்களிடம் சொல்கிறார்கள் என்றால் ஏன் அதை நம்மிடம் சொல்கிறார்கள் என அதைப் பற்றி சிந்தித்தாலே அந்த பிரச்சனை தீர்ந்துவிடும். உங்களை தூண்டிவிட்டால் அதை மனதில் ஏற்ற வேண்டாம். முதலமைச்சரை மட்டும் மனதில் கொண்டு நல்லதை மட்டும் செய்வோம். நமக்கு நல்லது செய்வார் நம்முடைய முதலமைச்சர் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு பெண்ணாய் இருந்து பல கஷ்டங்களை தாண்டி தான் வந்து இருக்கிறேன் இப்போதும் கஷ்டங்களை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எதைக் கண்டும் அஞ்சப் போவதுமில்லை ஒதுங்கி இருக்க போதும் இல்லை. நம்முடைய முதலமைச்சருக்காக மக்களுக்காக மீண்டும் மீண்டும் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் உங்களுக்காக வந்து நிற்பேன்.
இந்த ஊருக்கு வருவதற்கும் கூட ஒரு கஷ்டத்தை கொடுக்கிறார்கள். அதுதான் ஏன் என தெரியவில்லை. எனக்கு நம்பிக்கை உள்ளது என்னுடைய சகோதரர்கள் மனதில் எந்த கள்ளம் கபடமும் இல்லை. அவர்கள் கொஞ்சம் குழம்பி இருக்கிறார்கள் சரியாகி விடுவார்கள். என்னுடைய சகோதரர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள் என நம்புகிறேன். அந்த ஒற்றுமை தான் பலம் என நான் உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய முதலமைச்சரும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக நீங்கள் என்னோடு இணைந்து பணியாற்ற வேண்டும். நான் உங்களோடு இணைந்து ஒரு சகோதரியாக பயணிப்பேன். எனக்கு யாரும் வேற்றுமை எல்லாம் கிடையாது எனக்கு எல்லோரும் சமம். பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்பது என்னுடைய மந்திர கோல். இதுதான் நம்முடைய வெற்றி நம்முடைய ஜெயம் என பேசினார்.
அதனை தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்து வெளியே செல்லும்போது மேடையில் உங்களை மிரட்டுகிறார்கள் என பேசினீர்களே யார் மிரட்டுகிறார் என செய்தி அவர்கள் கேட்டபோது, யார் எவர் என பெயர் சொல்லாமல் என்னிடம் பேசுகிறார்கள் என்னுடைய வார்டில் இந்த பிரச்சனை உள்ளது என பொய்யான தகவல்களை கூறுவது பொய்யான பெயர்களை சொல்வது அதில் உண்மை தகவல்கள் இல்லை பத்து நிமிடத்திற்கு ஒருமுறை என்னுடைய உதவியாளரை போனில் மிரட்டுகிறார்கள். வேண்டுமென்றே களங்கம் விளைவிக்க வேண்டும் என செயல்படுகிறார்கள். ஒருவர் போன் செய்து என்னுடைய பைக் பஞ்சர் ஆகிவிட்டது பஞ்சர் கடை எங்கே இருக்கு என கேட்டு நக்கலாக சிரிக்கிறார். எங்களுக்கு எவ்வளவு தொந்தரவு கொடுக்கிறார்கள் என மக்களுக்கு தெரிய வேண்டும். எத்தனை கஷ்டம் வந்தாலும் நான் தாங்கிக் கொள்வேன். காவல்துறையிடம் கூட நான் புகார் கொடுக்க விரும்பவில்லை அவர்கள் என்ன செய்தாலும் மக்களுக்காக நான் மேலும் மேலும் உழைக்க தயாராக இருக்கிறேன் என கூறினார்.
இதையும் படிங்க: சரித்திரம் படைத்த முதல்வா..! சமூக நீதியின் சகாப்தமே..!! CM விஜயை புகழ்ந்த அமைச்சர் அருண்ராஜ்..!!