நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்திற்கு பின்னால் அமெரிக்கா இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஜூலை 20ம் தேதி மத்திய டெல்லியில் குறிப்பாக ஜந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பெருந்திரளாக மக்கள் கூடவார்கள் என இந்தியா வாழ் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு தூதரகம் முன்கூட்டியே வார்னிங் கொடுத்ததால் சந்தேகம்.
டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு பெரிய அளவிலான இளைஞர் எழுச்சியாக உருவெடுத்துள்ளது. 2026ஆம் ஆண்டு நீட் தேர்வில் ஏற்பட்ட கேள்விப்பட்டியல் கசிவு மற்றும் பிற தேர்வு ஒழுங்கீனங்கள் தொடர்பாக ஏற்பட்ட கோபம் இந்தப் போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஜூன் 6ஆம் தேதியிலிருந்து ஜந்தர் மந்தரில் தொடங்கிய இந்த அமைதியான போராட்டம், பின்னர் பெரிய அளவிலான மோதல்களுடன் தொடர்கிறது.
மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அவர்கள் மீது போலீசாரும், துணை ராணுவமும் தடியடி நடத்திய சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் மாணவர்கள் போராடத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகிவருகிறது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் காக்ரோச் ஜனதா பார்ட்டி மற்றும் மாணவர் அமைப்பினர் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்தொடர்ச்சியாக, தமிழ்நாட்டிலும் பல்வேறு பகுதிகளில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய் தலையில் விழுந்த முதல் அடி... தமிழ்நாட்டையே அதிர வைத்த விவகாரத்தில் ஆர்.பி.உதயகுமார் கேள்வி...!
அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் புதுக்கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முடக்கங்களை எழுப்பினர். இவர்கள் போலீசாரால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனிடம், மாணவர்களின் போராட்டம் மற்றும் நீட் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
மாணவர்களின் அறவழி மற்றும் அமைதியான போராட்டங்களை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே நேரத்தில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதையும் நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இந்த இரு நிலைப்பாடுகளிலும் எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்தில் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற வேண்டுமெனில், காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்று, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத வகையில் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு அனுமதி கோரப்பட்டால், அது சாத்தியமான அளவில் பரிசீலிக்கப்படும். ஆனால், திடீரென போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் சூழல் உருவானால், காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.
மீண்டும் வலியுறுத்துகிறேன். மாணவர்களின் அறவழிப் போராட்டங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை எனக்கூறினார்.
அன்றும் சரி, இன்றும் சரி, என்றும் நீட்டை முழுமையாக ஒழிப்பதே தமிழக வெற்றி கழகத்தின் நிலைப்பாடு. "நீட் ஒழிப்பே நிரந்தரத் தீர்வு; நீட் சீர்திருத்தம் அல்ல" என்பதே எங்களது கொள்கை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இதை விரிவாக விளக்கியுள்ளோம். எனவே, எங்களது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, நீட் ஒழிப்பும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதும் தான் எங்களது நிலையான கோரிக்கை என்றார்.
இதையும் படிங்க: ராகுலை டீலில் விட்ட விஜய்... தவெக மெளனத்தால் கலக்கத்தில் காங்கிரஸ்... பாஜக மீது பயமா?