தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் உத்திகளை வகுப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டார்.
மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை நியமித்து பாஜக தேசிய தலைமை அறிவித்தது. மத்திய இணை அமைச்சர்கள் இருவர் இணை பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர். அர்ஜுன் மேக்வால், முரளிதர் மோஹால் ஆகியோர் இணை பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

பியூஷ் கோயல் இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமாவார். 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் இருந்துள்ளார். இந்த முறையும் தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை தர உள்ளார்.
இதையும் படிங்க: கொங்கு மண்டலத்தில் தவெக டெபாசிட் இழக்கும்... இன்னொரு மநீம அவ்ளோ தான்... அர்ஜுன் சம்பத் உறுதி...!
சென்னை வரும் பியூஷ் கோயல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுகவும், பாஜகவும் தீவிரமாக களமாடி வரும் நிலையில் இந்த சந்திப்பு அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. கூட்டணி தொடர்பாகவும், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பணிகள் குறித்தும், ஆயத்த பணிகள் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தூய்மை பணியாளர் தற்கொலை.. திமுக நஞ்சுக்கொடி பரவ விடக்கூடாது... நயினார் கடும் கண்டனம்...!