தமிழ்நாடு முழுவதும் உள்ளம் தேடி, இல்லம் நாடி பிரச்சார பயணம் 234 தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருவப்படத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் விஜயகாந்த் உருவ சிலை கூடிய ரதயாத்திரை முன்பு கடை வீதி வழியாக நடை பயணம் மேற்கொண்டார் சிறிது தூரம் சென்ற பின்னர் ரத யாத்திரை வாகனத்தில் ஏறி சென்றார் இடையே பொதுமக்கள் மத்தியில் முரசு அடித்தார் விஜயகாந்த் ரசிகர் ஒருவர் கொடுத்த விஜயகாந்தின் புகைப்படத்திற்க்கு பிரேமலதா அன்பு முத்தம் கொடுத்தார்.
தொடர்ந்து பேசிய பிரேமலதா, இந்த பயணத்தில், திருவாரூர் மாவட்ட மக்களை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. வரும் 2026 தேர்தல் தேமுதிகவிற்கானது. கருணாநிதி பிறந்த திருவாரூரில் தியாகராஜர் கோயில் தேர் தான் புகழ்பெற்றது. திருவாரூரில் மக்கள் நிறைய கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். வரும் தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம். தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
இதையும் படிங்க: தீவிர தேடுதல் வேட்டை! தலைக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டு கொலை...
இப்போது கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. இன்றிலிருந்து யார் யாருக்கு கிரகணம் பிடிக்கப்போகிறது என்பதை பார்க்கலாம். 2026ல் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கிறதோ, அந்த கூட்டணியினர் தான் ஆட்சியமைப்பார்கள். தேமுதிக மாநாட்டிற்கு அனைவரும் வர வேண்டும். அதன் வாயிலாக மாற்றத்தை உருவாக்குவோம்.
தேமுதிக இல்லாமல் எந்த கட்சியும் இல்லை என்பதை தேர்தலில் நிரூபிப்போம். நமது முரசு வெற்றி முரசாகும். என பிரேமலதா பேசினார். இந்த பயணத்தில் தேமுதிக பொருளாளர் சுதீஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: CANCER நோயாளிகளுக்கு விடிவுகாலம் பிறந்தாச்சு.. சாதித்த ரஷ்யா.. பயன்பாட்டிற்கு வரும் தடுப்பூசி..?