தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய் அவர்கள் பங்கேற்கும் முதல் அரசியல் பரப்புரைக் கூட்டத்தை டிசம்பர் 9ஆம் தேதி நடத்திக் கொள்ளப் புதுச்சேரிக் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக, கட்சி சார்பில் 'ரோடு ஷோ' நடத்தக் காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், தற்போது உப்பளம் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறை அனுமதி வழங்கியபோதிலும், இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு மற்றும் நெரிசல் அபாயத்தைக் கருத்தில் கொண்டு பின்வரும் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது:
காவல்துறையின் முக்கிய நிபந்தனைகள்:
கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். கூட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
இதையும் படிங்க: விஜய் பொதுக்கூட்டம்: அனுமதி மறுக்கப்படவில்லை; மாற்று இடத் தேர்வு: தவெக விளக்கம்!
QR Code உள்ள நுழைவுச் சீட்டு இல்லாதவர்களைக் கூட்டத்தில் அனுமதிக்கக் கூடாது. குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படக் கூடாது.
த.வெ.க. தலைவர் விஜய்யின் முதல் அரசியல் பரப்புரைக் கூட்டம் இது என்பதால், கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு காவல்துறை இந்தக் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டுத் தவெக தனது முதல் பொதுக்கூட்டத்தைப் புதுச்சேரியில் நடத்தத் தயாராகி வருகிறது.
இதையும் படிங்க: போதிய வசதிகள் இல்லை: விஜய் பங்கேற்கும் ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட எஸ்.பி. அனுமதி மறுப்பு!