கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக அன்புமணி தரப்பில் நடத்தப்பட்ட பொதுக்குழு சட்ட விரோதம் என்று அறிவிக்க கூறி ராமதாஸ் தரப்பில் தேர்தல் ஆணயத்தில் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த ஒன்பதாம் தேதி அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணியே நீடிப்பார் என்றும்,மேலும் ஓராண்டிற்கு அவரது பதவிக்காலத்தை நீட்டிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில தற்பொழுது மருத்துவர் ராமதாஸ் தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதமானது அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த கடிதத்தில் குறிப்பாக பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆகிய தன்னுடைய தரப்பில் எந்த அனுமதியும் இல்லாமல், ஒப்புதலும் இல்லாமல் இந்த பொதுக்குழு கூட்டமானது கூட்டப்பட்டிருக்கிறது. இந்த பொதுக்குழு கூட்டமானது சட்ட விரோதமாக கூட்டப்பட்டிருக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அன்புமணியுடைய பதவி காலம் நிறைவடைந்த நிலையில் அவர் ஓராண்டுக்கு அவருடைய தலைவர் பதவி நீட்டிக்கப்பட்டிருப்பதாக ஒரு தீர்மானமானது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அந்த தீர்மானமும் சட்ட விரோதமான தீர்மானம் என்ற ஒரு புகாரை அந்த கடிதத்தில மருத்துவர் ராமதாஸ் தரப்பில்ல குறிப்பிட்டுள்ளனர். அதேபோல தொடர்ந்து செயல் தலைவராக தான் அன்புமணி செயல்பட்டு வருகிறார், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் அந்த பதவியில் இருந்து நீக்குவது குறித்து ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: பாமக நிறுவனர் ராமதாஸை உலுக்கிய சோகம்... பெரும் அதிர்ச்சியுடன் தமிழக அரசுக்கு கோரிக்கை...!
ஏற்கனவே தேர்தல் ஆணையத்தை அன்புமணி தரப்பில் நாடியுள்ளது, இதனைத் தொடர்ந்து பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அன்புமணி தரப்பில் அளிக்கக்கூடிய இந்த நேரத்தில் ராமதாஸ் தரப்பில் இருந்து இப்படியொரு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவர் ராமதாஸ் தலைமையில 17ஆம் தேதி பொதுக்குழு கூட்டமானது நடைபெற இருக்கிறது. அந்த பொதுக்குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக செயல் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் எல்லாம் சொல்லப்படுகிறது. அது குறித்து எல்லாம் தேர்தல் ஆணையத்தில் எழுதப்பட்டிருக்கக்கூடிய கடிதத்தில குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து இது போன்ற கட்சி விதிகளை மீறி அன்புமணி ஈடுபட்டு வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு எழுதப்பட்ட கடிதத்தில குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் பார்க்கும்போது வரும் பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணியை செயல் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பொதுக்குழு உடைய ஒப்புதலோடு இந்த முடிவு எடுக்கப்படும் என்ற ஒரு தகவலும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து மருத்துவர் ராமதாஸ் தரப்புல அடுத்த கட்டமாக இந்த பொதுக்குழுவில அவரையே தலைவராக தேர்வு செய்வதற்காக ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட இருக்கிறது.
இதையும் படிங்க: அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம்... என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு...!