தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பாமகவில் நியமிக்கப்பட்ட புதிய தலைமை நிர்வாக குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டதில் 18 தலைமை நிர்வாகிகளான பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ், திலகபாமா, பாலு, வெங்கடேஸ்வரன், வடிவேல் ராவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்த குழு கலைக்கப்பட்டது.

அதனையடுத்து புதியதாக சேர்க்கப்பட்ட பொதுச்செயலாளர் முரளிசங்கர், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், கெளரவ தலைவர் ஜி கேமணி புதா, அருள்மொழி, அன்புமணி ராமதாஸ், கரூர் பாஸ்கரன் அடங்கிய புதிய பாமக தலைமை நிர்வாக குழுவிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை ஈடுபட்டுவருகிறார்.
இதையும் படிங்க: அடுத்தவங்க சொன்னா அப்படியே கேட்போமா? எல்லாம் எங்களுக்கு தெரியும்.. ஜி.கே மணி கொந்தளிப்பு..!

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக தைலாபுரம் இல்லத்தின் முன்பாக பேட்டியளித்த கெளரவ தலைவர் ஜி கே மணி உடல்நலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இருதய பிரச்சனை, முதுகு தண்டு வலி போன்றவைகளால் பாதிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளதாக தெரிவித்தார். பல ஆண்டுகளாக மனம்தளராமல் பாமகவில் மருத்துவர் ராமதாசுடன் பயணித்துள்ளதால் இறுதி வரை உறுதியாக ராமதாசுடன் பயணிக்க வேண்டும் எக்கூறினார்.

வலிமையான கட்சி என்று கூறபட்ட நிலையில் இப்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடி ஒரு குழப்பமான சூழ்நிலையில் தான் மன உளைச்சல் வேதனையில் இருப்பது போல், கட்சியில் இருக்கும் அடிமட்ட பொறுப்பாளர்கள் எல்லாருக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. வரக்கூடிய செய்தியை இரு தரப்பில் இருந்து பார்க்கும் போது எல்லோருக்கும் குழம்பி போய் வேதனையாக உள்ள நிலை உள்ளது. இது மாறனும் இது பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பனும் ஆசையும் கூட இதுக்கு தீர்வும் முடிவும் ஒரே இடத்தில் இருவரும் அமர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும் இல்லையென்றால் இதற்கு தீர்வு ஏற்படாது என்றார்.
இதையும் படிங்க: MLA அருள் இனி பாமக கொறடா இல்ல... சபாநாயகரிடம் முறையிட்ட அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள்!