சென்னை ஆர். கே நகர் தொகுதிக்கு உட்பட்ட இருசப்பவேசரி தெருவில் சட்டமன்ற உறுப்பினர் எபிநேசர் ஆய்வு மேற்கொள்வதற்காக சென்றார். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள பொது மக்களிடம் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்தும், அதில் பொது மக்களுக்கு வழங்கப்படும் அரசு சேவைகள் குறித்தும் எபினேசர் எம்எல்ஏ விளக்கம் அளித்து கொண்டிருந்தார். அப்போது பொதுமக்கள் அடுக்கடுக்காக குற்றசாட்டுகளை முன்வைத்து முறையிட்டனர். விலைவாசி உயர்ந்தால் எந்த ஒரு பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை என்றும், சாலைகள் செல்ல முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது. எதற்காக 1000 ரூபாய் கொடுக்கிறீர்கள். இலவச பேருந்து யார் கேட்டது? என்றெல்லாம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
சில பெண்கள் ஆர்.கே.நகரில் பல பெண்களுக்கு மகளிர் உதவித்தொகை தரவில்லை என குற்றச்சாட்டியுள்ளனர். திமுகவினர் அந்த பெண்களிடம் மாடி வீடு கட்டி உள்ளீர்கள், ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கெல்லாம் தமிழக அரசு அத்தகைய சலுகையை தராது என்று கூறினர். தேர்தல் நெருங்கும் போது தான் எங்களை சந்திக்க வருவீர்களா என்று கேள்வி எழுப்பினார். இனி மேல் நீங்கள் அந்த மகளிர் உரிமைத் தொகையை எங்களுக்கு தந்தால் என்ன தராமல் போனால் என்ன என்று ஆதங்கத்துடன் கூறினார்.
இதில், ஆத்திரம் அடைந்த எபினேசர் எம்எல்ஏ சொந்த வீடு உள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படாது, அதேபோல, மகளிர் விடியல் பேருந்தில் பயணம் செய்யக்கூடாது என்று தெரிவித்தார். இதனால் மக்களுடன் வாக்குவாதம் முற்றவே பெருங்கோவமடைந்த எபினேசர், அந்தப் பகுதியில் உள்ள பொது மக்கள் அனைவரும் மென்டலா என்று சரமாரியாக திட்ட தொடங்கினார்.
இதையும் படிங்க: தவெக மதுரை மாநாட்டிற்கு புது சிக்கல்... விஜய்க்கு எதிராக ஒன்றிணைந்த திமுக, அதிமுக...!
இதையும் படிங்க: சென்னையில் பயங்கரம்; பிட்புல் நாய் கடித்து சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு...!