சென்னை குமரன் நகர் பகுதியில் பிட்புல் ரக வளர்ப்பு நாய் கடித்து ஒருவர் உயிரிழந்திருக்கிறார். சென்னை ஜாபர்கான்பேட்டை விஎஸ்எம் கார்டன் தெரு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் இவருடைய பக்கத்து வீட்டில் வசிப்பவர் பூங்கொடி என்பவர் பிட்புல் என்கிற உயர்ரக நாயை வளர்த்து வருகிறார். இன்று மதியம் மூன்று மணி அளவில் கருணாகரன் அவருடைய வீட்டின் வழியே சென்ற பொழுது அந்த நாயானது கருணாகரனை சரமாறியாக தாக்கியுள்ளது. அவருடைய இடுப்பு பகுதி மற்றும் தொடை பகுதி உள்ளிட்ட இடங்களில் எல்லாம் கடித்து குதறி இருக்கிறது.
இந்த சம்பவத்தில் உடனடியாக அந்த வளர்ப்பு நாயுடைய உரிமையாளர் பூங்கொடி, பிட்புல் ரக நாயை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார். ஆனால் அந்த நாய் வளர்க்கும் உரிமையாளரையும் சேர்த்து கடித்திருக்கிறது. இதனால் காயமடைந்த பூங்கொடியும் கேகே நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குறிப்பாக கருணாகரனை சரமாரியாக கடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஏற்கனவே சென்னையில் நாய் கடி சம்பவங்கள் என்பது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சியில் நடவடிக்கை எடுக்க வேண்டும என பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தற்பொழுது நாள் கடித்து ஒருவர் உயிரிழந்திருக்கிறார். குறிப்பாக ராபிஸ் போன்ற தொற்று நோய்கள் நாய்க்கடி மூலமாக பரவுவது அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில், தற்பொழுது சென்னை ஜாபர் பேட்டையில் நாய் கடித்து ஒருவர் உயிரிழுந்திருக்கிறார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதையும் படிங்க: அமலாக்கத்துறை ரெய்டு... திமுக அமைச்சர்களுக்கு முதலமைச்சர் கொடுத்த முக்கிய ஆலோசனை...!
இதையும் படிங்க: 'வாகைசூடும் வரலாறு திரும்புகிறது'.. தெறிக்கவிடும் தவெக மாநாட்டின் கட்அவுட்.. இனி ஆட்டம் வெறித்தனம்தான்..!!