அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்து வந்தார். இதனிடையே செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து புறக்கணிப்பதற்கான காரணம் என்னவென தெரிய வந்துள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் தூது:
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக தலைமையுடன் ஏற்பட்டிருந்த அந்த மனக்கசப்பு ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் இன்றே பேசி சரி செய்யப்பட்டுவிட்டது எனவே பிரச்சனை தீர்ந்தது என்றுதான் நாம் உள்ளே பேசிய சில முக்கிய முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: செங்கோட்டையன் உடன் அதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை.. இபிஎஸ் மீதான அதிருப்தியை சரிக்கட்ட முயற்சி..!
எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையிலான பிரச்சனை அடுத்த தர்ம யுத்தமாக உருவெடுத்துவிடுமோ என்ற கவலை அதிமுகவில் எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி முகத்தில் விழிப்பதையே செங்கோட்டையன் தவிர்த்து வருகிறார். அத்திக்கடவு அவிநாசி திட்ட விவசாயிகளின் பாராட்டு விழா, தலைமை அலுவலகத்தில் நடந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டம், தற்போது 3வது முறையாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக்கூட்டம் என எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் செங்கோட்டையன் அதிருப்தி காட்டி வருகிறார்.

எனவே எடப்பாடி - செங்கோட்டையன் இடையிலான பனிப்போரைச் சரி செய்ய அதிமுக மூத்த நிர்வாகிகளான கேபி முனுசாமி, எஸ்பி வேலுமணி, தங்கமணி தளவாய் சுந்தரம் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதன் பலனாக செங்கோட்டையன் மனம் மாறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னதாக தன்னிடம் சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்த அதிமுக நிர்வாகிகளிடம்
செங்கோட்டையன்ஒரு பிளாஷ் பேக்கை தெரிவித்துள்ளார். அதாவது எதற்காக எடப்பாடி பழனிசாமியுடன் பிரச்சனை ஏற்பட்டது, அதற்கான காரணம் என்ன என விளக்கியிருக்கிறார்.
செங்கோட்டையன் சொன்ன பிளாஸ்பேஷ்:
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தினுடைய செயலாளராக செங்கோட்டன் இருக்கிறார். கிழக்கு மாவட்டத்தினுடைய செயலாளராக முன்னாள் அமைச்சர் கேசி கருப்பண்ணன் இருக்கிறார். இருவருக்குமே ஆகாது இருவருக்கும்,ஏழாம் பொருத்தம் என அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த இருவருக்கும் இடையே தொடர்ந்து பல ஆண்டுகளாக பிரச்சனை இருப்பதாக சொல்கிறார்கள். தமிழகம் முழுக்க அதிமுக, திமுக, பாமக என எந்த கட்சி எடுத்தாலும் பெரும்பாலும் அருகருகே இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொள்வார்கள் பகைமைப் போக்கு இருக்கும். சில சமயங்களில் இருதரப்புமே “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என கடந்து போய்விடுவார்கள். சில சமயங்களில் மோதம் போக்கு பட்டி, தொட்டி வரைக்கும் தெரியும் அளவிற்கு பூகம்பமாய் வெடிக்கும்.

அப்படித்தான், செங்கோட்டையனுக்குப் ஆகவே ஆகாத இரண்டு நபர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அம்மா பேரவையில் பதவி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நியமனங்கள் கடந்த ஜனவரி மாதம் நடந்துள்ளது. ஈரோடு பகுதியில் செங்கோட்டையனை எதிர்த்து அரசியல் செய்து வரும் அந்தியூர் தொகுதியுடைய முன்னாள் எம்.எல்.ஏ.வான இ.எம்.ஆர். ராஜாவுக்கு பதவி கொடுகப்பட்டுள்ளது. செங்கோட்டையன் தான் மாவட்ட செயலாளர் என்றாலும், இவர் நிறைய விஷயங்களில் தனித்தே செயல்பட்டு வந்துள்ளார்.
குறிப்பாக கட்சி நிகழ்ச்சிகளுக்காக அடிக்கப்படும் பிளக்ஸ், பேனர்களில் செங்கோட்டையன் படத்தை பெரிதாக அடிப்பதில்லை என்றும், அதற்கு பதிலாக பக்கத்து மாவட்ட செயலாளரான கே.சி.கருப்பண்ணனின் படத்தை பெரிதாக போடுவதோடு, அவரை அழைத்து வந்து கூட்டத்தை நடத்துவது என செங்கோட்டையனை கோபப்படுத்தக்கூடிய பல விஷயங்களில் இ.எம்.ஆர். ராஜா தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.

இதேபோல் வந்த ஒரே கட்சியில் இருந்தாலும் செங்கோட்டையினை எதிர்த்து 30 ஆண்டு காலத்துக்கும் மேலாக நேரடியாக அரசியல் எதிரியாக இருந்து வருபவர் விகே சின்னசாமி அவரது மகன் சிவகுமார், அவருக்கும் அதிமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவரும் செங்கோட்டையன் மாவட்ட செயலாளராக இருந்தாலும் அவருக்கு கட்டுப்பாட்டு நடப்பது கிடையாதாம். எனவே என்னுடைய மாவட்டத்தில் எனக்கு பிடிக்காத, எனக்கு பணிந்து நடக்காதவர்களுக்கு, என்னை ஒழித்துக் கட்ட வேண்டும் என நினைக்கக்கூடியவர்களுக்கு பதவி கொடுத்ததில் தான் எடப்பாடி மீது மிகவும் அப்செட்டில் இருப்பதாக செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி சில சம்பவங்களையும் அவர்களிடம் செங்கோட்டையன் கூறியுள்ளார். அதாவது 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையனின் ஆதரவாளரான ஏஜி வெங்கடாஜலம் வெறும் 1200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதற்கு இ.எம்.ஆர். ராஜா ஒரு காரணம் எனக்கூறியுள்ளார். இதைத்தான் சமீபத்தில் கூட செங்கோட்டையன் பேசியிருந்தார். சில துரோகிகளால் தான் நாம் அந்தியூர் தொகுதியிலே தோல்வி அடைந்தோம் என்று சுட்டிக் காண்பித்து பேசியிருந்தார். இதற்கு ஒரு நான்கு ஐந்து நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அந்த கூட்டத்தில் கூட கலவரம் எல்லாம் ஏற்பட்டது. அப்போது கூட இந்த இரண்டு நபர்களுடைய பெயர்களை குறிப்பிட்டு செங்கோட்டைய பேட்டியும் கொடுத்திருந்தார். எனவே இவர்களுக்கு ஒரு நேரடி மோதல் இருக்கக்கூடிய நிலையில், கே.சி.கருப்பண்ணன் தான் இதற்கு மூளையாக இருந்து செயல்படுகிறார் என்று சொல்லப்படுகிறார் என்றும் குற்றச்சாட்டியுள்ளார்.
செங்கோட்டையனுடன் திடீர் மீட்டிங்:
எனவே செங்கோட்டையனுக்கும் கே.சி.கருப்பண்ணனுக்கும்அவர்களுக்கும் அவர்களுக்கும் இடையே இருக்கக்கூடிய மோதல் போக்குதான், எடப்பாடி பழனிச்சாமி நம் பக்கம் ஆதரவாக நிற்காமல் கே.சி.கருப்பண்ணனுக்கு சப்போர்ட் செய்கிறாரே என்ற வருத்தத்தில் தான் அவர் கோபமாக இருந்ததாக கூறப்படுகிறது. இன்றைய தினம் காலை 9:30 மணிக்கு கேள்வி நேரம் ஆரம்பித்தது ஒரு பத்து நிமிடத்திற்குள்ளாக அதிமுகவினுடைய முக்கிய நிர்வாகிகளாக இருக்கக்கூடிய மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, எஸ் பி வேலுமணி, தங்கமணி,தளவாய் சுந்தரம் இந்த நான்கு பேரும் செங்கோட்டையனை அழைத்துக் கொண்டு லாபிக்கு சென்றார்கள்.

லாபி என்றால் , சட்டமன்றம் நடைபெறக்கூடிய இடத்திற்கு அருகிலே இருக்கக்கூடிய அந்த அட்டென்டன்ஸ் எம்எல்ஏக்கெல்லாம் வந்து அட்டென்டன்ஸ் சைன் செய்யும் இடத்திற்கு பக்கத்தில் ஒரு சோபா போடப்பட்டிருக்கும். அங்கேயே அமர்ந்து ஐந்து பேரும் பேசியுள்ளனர். உங்களுக்கு என்ன தான் பிரச்சனை, கட்சியின் பெயர் வெளியே கெடுகிறது, இந்த மோதல் மிகப்பெரிய பேசுபொருளாகியுள்ளது என சமாதானம் செய்துள்ளனர்.
நீங்க கட்சி ஒத்துமையாக இருக்கணும்னு நினைக்கக்கூடிய ஆளு நீங்களே இப்படி பண்ணலாமா? என சொல்லி நாலு பேரும் மாறி மாறி செங்கோட்டையின் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இறுதியில் அவருக்கு இருக்கக்கூடிய மனக்குமுறல்களை, மனக்கசப்பை 2021ல் சொந்த கட்சிக்காரர்களே உள்ளடி வேலை செய்ததை எல்லாம் நினைவு கூர்ந்து தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார். அதனை கேட்டுக்கொண்ட அந்த நான்கு பேரும், “சரி அண்ணே நீங்க உள்ள போங்க” அப்படின்னு சொல்லி அவரை சட்டசபைக்குள்ள அனுப்பிவைத்துள்ளனர்.

பின்னர், கேசி கருப்பண்ணன் அவர்களை அழைத்து வந்தார்கள் அவரை உட்கார வைத்து ஒரு 15 நிமிடம் பேசியுள்ளனர். உங்களுக்கு என்ன பிரச்சனை ஏன் செங்கோட்டையன் அவர்களுடன் பிணக்கு ஏற்பட்டிருக்கிறது? என கேட்டுள்ளனர். இரு தரப்பிலும் பேசி முடித்தவுடன் செங்கோட்டையனுக்கு, கேசி கருப்பணன் இசைவு தெரிவிப்பதாக ஒத்துக்கொண்டுள்ளார். இதையடுத்து கே.சி.கருப்பணன் உட்பட அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியுடைய அறைக்கு சென்று பேசியுள்ளார். இதனால் இன்றுடன் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எடப்பாடி 'OUT' செங்கோட்டையன் 'In'... சட்டப்பேரவையில் தரமான சம்பவம்...!