அதிமுகவில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட நம்பியூர் அதிமுக ஒன்றிய செயலாளர் தம்பி என்ற சுப்பிரமணியம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி மலர வேண்டும் என்பதற்காக செங்கோட்டையன் முன்மொழிந்ததை நாங்களும் வழிமொழிகிறோம், தொண்டர்களின் கருத்தையும் தமிழக மக்களின் கருத்தையும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். 2026 இல் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக செங்கோட்டையனை பின்பற்றி நாங்கள் செல்வோம்.
2026 இல் ஜெயலலிதா எம்ஜிஆர் ஆட்சி மலர வேண்டும் அதற்காக செங்கோட்டையன் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் நாங்கள் பின் நிற்போம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
கட்சியிலிருந்து நாங்கள் நீக்கப்பட்டாலும் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆட்சி உருவாக வேண்டும் என்பதற்காக செங்கோட்டையன் பின்னால் நாங்கள் செல்வோம். பொறுப்புகள் இல்லை என்றாலும் கட்சியில் தொடர்ந்து நாங்கள் பணியாற்றுவோம்.
இதையும் படிங்க: அப்டியே விட்ருவோமா? ஒருங்கிணைப்பு குழு ரெடி! மாஸ் காட்டும் செங்கோட்டையன்...
செங்கோட்டையன் சொல்வதை நாங்கள் செய்வோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்ர செங்கோட்டையன் எடுத்த முடிவு நல்ல முடிவு, தொண்டர்களும் மக்களும் நினைப்பதை அவர் சொல்லி இருக்கிறார் அவர் பின்னால் நாங்கள் எப்போதும் துணை நிற்போம் கட்சி தலைமை எடுத்த முடிவுக்காக நாங்கள் வருத்தப்படவில்லை என்றார்.
கட்சி பதவியில் நீக்கப்பட்ட அதிமுக கோபி மேற்கு ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன் அளித்த பேட்டியில், செங்கோட்டையன் தனது கருத்தை சொன்னதற்காக பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் எங்களையும் நீக்கி இருக்கிறார். செங்கோட்டையன் எவ்வழியோ நாங்களும் அவ்வழியில் தான் செல்வோம். இங்குள்ள அனைத்து நிர்வாகிகளும் செங்கோட்டையன் பின்னால் தான் நாங்கள் நிற்கின்றோம். அவருக்கு பின்னால் எப்போதும் துணை நிற்போம் எனக்கூறினார்.
இதையும் படிங்க: கொள்ளையடிக்க தெரிஞ்சா தான கரப்ஷன் பண்ண முடியும்! திமுக அரசை கடுமையாக விமர்சித்த எடப்பாடி