வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பதிலடிக் கொடுத்திருக்கிறார்.

டெல்லியில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, “அநேக இந்திய மொழிகளுக்கு தாய் மொழி சமஸ்கிருதம். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை, சமஸ்கிருதத்தை முக்கிய தூணாக கொண்ட இந்திய அறிவுமுறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது” என்று பேசியிருந்தார். அமித் ஷாவின் இந்தக் கருத்துக்கு தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடிக் கொடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவுமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்று மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். இதைத்தான் நாங்களும் தெரிவித்து வருகிறோம்.

வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என்று சொல்கிறோம். இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்துக்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசிய கல்விக் கொள்கை என்கிறோம்” என்று அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஆப்ட்ரால் மத்திய அரசின் ஏஜெண்ட் திட்டங்களை தடுப்பதா.? ஆளுநருக்கு எதிராக கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்!
இதையும் படிங்க: அடுத்த அடி.. பாகிஸ்தான் தபால்கள், பார்சல்களுக்கு தடை.. கேப் விடாமல் நொறுக்கும் இந்தியா!!