திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் வழக்கின் தீர்ப்பு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று வெளியானது. தீர்ப்பை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் வாசித்தனர். கடந்த 18ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு வெளியாகி உள்ளது. பொது அமைதி பாதிக்கும் என்ற அரசு தரப்பின் வாதத்தை ஏற்றுக் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக அரசின் வாதம் தவறானது என்றும் கருதினர். மலை உச்சியில் உள்ள தூண் தர்காவிற்கு சொந்தமானது என்ற வாதமும் தவறானது என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்து இந்துக்களும் பார்க்க வேண்டும் என்றுதான் உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது என்று கூறினர்.
பொது அமைதி பாதிக்கப்படும் என அரசுக்கு வருவது யூகத்தின் அடிப்படையிலானது என்றும் கூறப்பட்டது. தீபத்தூண் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்திலேயே உள்ளது என்று தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மலை உச்சியில் தீபம் ஏற்றும் போது பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து மதுரை கிளை நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் அமைந்துள்ள தீபத்தூண் கோயிலுக்குச் சொந்தமானது என்பதை நீதிபதிகள் அமர்வு தெளிவுபடுத்தி இருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக அரசுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், அரசியல் நோக்கங்களுக்காக அரசு இத்தகைய நிலைக்குத் தாழ்ந்து செல்லக்கூடாது என்று குறிப்பிட்டதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: கணக்கு இடிக்குது..! ரூ.3000 பத்தாது... 8 ஆயிரம் குடுங்க.. பாஜக செய்தி தொடர்பாளர் வலியுறுத்தல்..!
சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்ற அச்சம், ஒரு சமூகத்திற்கு எதிராக மற்றொரு சமூகத்தைத் தூண்டிவிடும் நோக்குடன், அதிகாரிகளால் தங்கள் வசதிக்காக உருவாக்கப்பட்ட ஒரு கற்பனையான பூதம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது என்றும் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் சரியாக உறுதிப்படுத்தியபடி, திமுக அரசு தனது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்தி, சட்டத்தின் ஆட்சியை மதித்து, முருகப் பெருமானின் பக்தர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கும் என்று நம்புவதாகவும் அண்ணாமலை கூறினார்.
இதையும் படிங்க: ஆணவத்தின் உச்சியில் கொக்கரிக்கும் அமித் ஷா…! ஊழல் பற்றி பேச என்ன அருகதை இருக்கு? செல்வப் பெருந்தகை கொந்தளிப்பு..!