துப்பாக்கிச்சூடு போட்டியில் வென்றவர்களுக்கு அண்ணாமலை பதக்கம் வழங்கியபோது, அவரிடம் இருந்து அமைச்சர் டிஆர்பி ராஜா மகன் பதக்கத்தை கழுத்தில் பெற மறுத்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரங்குடி பட்டியில் தமிழ்நாடு துப்பாக்கி சங்கம் மற்றும் புதுக்கோட்டை ராயல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவை இணைந்து மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியை நடத்தி வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகள் கீழ் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கோப்பை உட்பட பல்வேறு கோப்பைகள் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வழங்கப்பட உள்ளன. கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த போட்டி 28ஆம் தேதி வரை நடக்கிறது. இன்று நடந்த போட்டிகளை முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். மேலும், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சிறப்புரை ஆற்றினார்.
இதையும் படிங்க: கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் கேப்டன்..! அண்ணாமலை புகழாரம்..!
இந்த துப்பாக்கிச் சூடு போட்டியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை கழுத்தில் அணிவித்தார். அண்ணாமலையிடம் இருந்து பதக்கத்தை அமைச்சர் டிஆர்பி ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு, கழுத்தில் வாங்க மறுத்தார். தொடர்ந்து, அவரிடம் இருந்து கையில் பெற்றுக் கொண்டு புகைப்படத்திற்கு மட்டும் நின்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: இபிஎஸை தற்குறின்னு சொன்ன அந்த வாய் எங்க? - இப்படி அந்தர் பல்டி அடிச்சிட்டீங்களே அண்ணாமலை... புகழேந்தி ஆதங்கம்...!