தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் பிரசாரம் செய்ய கட்சி நிர்வாகிகள் வராததால், புதிய ‘ஆபர்’ ஒன்றை அறிவித்துள்ளனர்.
விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு நகர்ப்புற தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிகளில் சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்தாலே போதும் என்று விஜய் நினைத்ததால், அங்கு பிரசாரத்தை முடித்துவிட்டார். ஆனால் கட்சி நிர்வாகிகள் காலை மற்றும் மாலை நேரத்தில் மட்டும் சில நிமிடங்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் விஜய்க்கு பின்னடைவு ஏற்படும் என்று சர்வே முடிவுகள் வந்துள்ளன.
இதை அறிந்த தலைமை, பெரம்பூர் தொகுதி மாவட்டச் செயலர் சிவா மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி பொறுப்பாளர் கரிகாலன் ஆகியோரை எச்சரித்துள்ளது. “தலைவர் போட்டியிடும் தொகுதி என்பதால் வெற்றி எளிதல்ல. குறைந்தது ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். தினமும் 10 மணி நேரம், குறைந்தது 200 பேர் பிரசாரம் செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெரம்பூர் வீடுகளில் திடீர் விசிட்! பொதுமக்களுக்கு விஜய் சர்ப்ரைஸ்! தவெக வெளியிட்ட வைரல் வீடியோ!

ஆனால் உண்மையில் தினமும் 50 பேர் கூட பிரசாரத்துக்கு வருவதில்லை. இதையடுத்து, தொகுதி பொறுப்பாளர்கள் நிர்வாகிகளிடம், “பிரசாரம் செய்யும் நபர்களை தேர்தலுக்குப் பிறகு விஜயிடம் அழைத்துச் சென்று போட்டோ எடுக்க வைக்கிறேன்” என்று புதிய ‘ஆபர்’ அளித்துள்ளனர்.
இந்த ஆபரை அறிவித்த பிறகும் பிரசாரத்தில் சுணக்கம் நீடிப்பதாக த.வெ.க. மூத்த நிர்வாகிகள் வேதனை தெரிவித்தனர். விஜய் போட்டியிடும் இரு தொகுதிகளும் நகர்ப்புறம் என்பதால், சமூக ஊடகங்களே போதும் என்ற எண்ணம் கட்சியினரிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், விஜய்யின் இரு தொகுதிகளிலும் பிரசாரம் தீவிரமடைய வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது. “விஜய்யுடன் போட்டோ” ஆபர் எந்த அளவுக்கு பலன் தரும் என்பதை அடுத்த சில நாட்களில் பார்க்க வேண்டும்.
இந்த உள் பிரச்சினை த.வெ.க.வுக்குள் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது. தலைவர் போட்டியிடும் தொகுதிகளில் கூட பிரசாரம் சரியாக நடைபெறவில்லை என்பது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விஜய்க்கு எதிராக களம் இறங்கும் கமல்!! ஸ்கெட்ச் ரெடி! திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்!