தமிழ் சினிமாவின் தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய், தனது திரை வாழ்க்கையின் மூலம் தமிழக மக்களின் இதயங்களை கைப்பற்றியவர். ஆனால், அவரது அரசியல் பயணம் தொடங்கியபோது, அந்த ரசிகர்களின் அன்பு இன்னும் ஆழமான, உணர்ச்சிகரமான வடிவத்தை அடைந்தது. 2024 பிப்ரவரி 2 அன்று தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியபோது, விஜயின் ரசிகர்கள் அது வெறும் கட்சி அல்ல, அவர்களின் கனவுகளுக்கான ஒரு இயக்கம் என்று உணர்ந்தனர்.
இந்த அன்பு, வெறும் பட ரசிகர்களின் உற்சாகத்தைத் தாண்டி, அரசியல் அடிப்படை உருவாகி, கட்சியின் வேர்களை வலுப்படுத்தியுள்ளது. விஜயின் ரசிகர்கள், குறிப்பாக இளைஞர்கள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரிவுகள், அவரை ஒரு தலைவராக மட்டுமல்லாமல், சமூக மாற்றத்தின் காவலராகக் கண்டனர். விஜயின் ரசிகர் அன்பின் வேர்கள், அவரது சினிமா பயணத்துடன் இணைந்தே உருவானவை.

தமிழக அரசியல் களத்தில் புதிய அலை என்னும் நிலையில் நடிகர் விஜய் தீவிரமாக களம் கண்டு வந்தார். ஆனால் அந்தப் பயணத்தை முடக்கும் வகையில் ஒரு துயரம் நிகழ்ந்தது. கரூர் சம்பவம் தமிழக வெற்றி கழகத்தை தற்சமயம் முடக்கி வைத்துள்ளது. 41 உயிர்கள் பறிபோனது அரசியலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக தமிழக வெற்றி கழகம் மீண்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டால் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளோடு செய்வதில் கட்சி முனைப்பு காட்டி வருகிறது. கட்சியை பலப்படுத்தும் நோக்கிடம் செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல... அதை செய்ய முடியாது... உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறையீடு...!
இதனிடையே, மாநகரம் முதல் கிளைக் கழகம் வரை நிர்வாகிகள் நியமனத்தை விரைந்து முடிக்க தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் தனது அடுத்த பிரச்சார சுற்றுப் பயணத்தை தொடங்குவதற்குள் நிர்வாகிகள் நியமனத்தை முழுமையாக முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அதுக்கு ஆள் இருக்காங்க… ஏன் நான் கேட்க கூடாதா? ஆத்திரமடைந்த வேல்முருகன்… சட்டமன்றத்திலேயே வாக்குவாதம்…!