கோவை சிங்காநல்லூர் பகுதியில் தனியார் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. அதில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு மாநில பொதுச் செயலாளர் அருண்ராஜ் கலந்துகொண்டு மருத்துவமனையைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்குப் பின்னர் அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த மருத்துவமனை திறக்கப்பட்டதற்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி பேச்சு வார்த்தை குறித்தான கேள்விக்கு அது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் ஏற்கனவே கூறியதை போல் அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டும் எனப் பதிலளித்தார்.
இதையும் படிங்க: திமுகவுக்கு தாவிய 30 தவெகவினர்..!! செங்கோட்டையன் கோட்டைக்குள் நுழைந்த செந்தில் பாலாஜி..!!
அண்ணாமலை தமிழக வெற்றி கழகம் குறித்து பேசியது தொடர்பான கேள்விக்கு எனக்கு அவரைப் பற்றித் தெரியாது ஆனால் நாங்கள் யாரும் நாய் கிடையாது என்றும் நாங்கள் ஆறறிவு உள்ள மனிதர்கள் தந்தை பெரியார் கூறியபடி பகுத்தறிவு உள்ள தொண்டர்கள் எனத் தெரிவித்தார். விஜய் தற்பொழுது நடிகர் கிடையாது முன்னாள் நடிகர் என்று குறிப்பிட்ட அவர் விஜய் நடிப்பை முற்றிலும் ஆக விட்டுவிட்டு அரசியலுக்கு மக்கள் சேவை செய்வதற்காக வந்துவிட்டார் என கூறினார். ஈரோடு மாநாட்டிற்கு வந்தவர்களும் நடிகரைப் பார்ப்பதற்காக வரவில்லை தமிழ்நாட்டின் முதன்மை அரசியல் கட்சியாக இருக்கக்கூடிய தமிழக வெற்றி கழகத்தின் தலைவரைத் தான் பார்க்க வந்தார்கள் எனத் தெரிவித்தார். விஜய் நடிப்பை விட்டு விட்டு அரசியலுக்கு வந்துள்ளார் ஆனால் அரசியலில் தற்பொழுதும் சிலர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் யார் என்று நான் குறிப்பிட விரும்பவில்லை என தெரிவித்தார். Political Vijay is more Powerful then Actor Vijay என்றார்.
தேர்தல் அறிக்கையில் என்னென்ன சாராம்சங்கள் இருக்கக்கூடும் என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர் மக்களுக்கான தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது, அனைத்து தரப்பு மக்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டு மக்களுக்கான தேர்தல் அறிக்கையாக அது இருக்கும் தமிழ்நாடு வளர்ச்சிக்கான தேர்தல் அறிக்கையாகவும் சமூக நீதிக்கான தேர்தல் அறிக்கையாகவும் தொழில் வளர்ச்சி இயற்கை வளங்களைப் பாதுகாப்பது எனச் சமநிலைப்படுத்தக்கூடிய தேர்தல் அறிக்கை எங்கள் அறிக்கை இருக்கும் எனத் தெரிவித்தார்.
ஈரோட்டில் நடைபெற்ற பரப்புரையின் பொழுது இளம் பெண் ஒருவர் என்னுடைய குடும்பத்தினர் விஜய்க்கு ஓட்டு போடவில்லை என்றால் உணவில் விஷம் வைத்து விடுவேன் என்று கூறியது தொடர்பான கேள்விக்கு அது எந்த அளவிற்கு தலைவரைப் பிடித்திருக்கிறது என்ற கோணத்தில் தான் பார்க்க வேண்டும் விஜய் மீது வைத்துள்ள அன்பின் காரணமாக அவர் அவ்வாறு கூறியிருக்கிறார் என்றார். மேலும் அந்த இளம் பெண் கூறியது என்பது 50 ஆண்டு காலமாக இரண்டு கட்சிகளுக்கும் ஓட்டு போட்டுப் போட்டு எதுவும் மாறவில்லை என்ற விரக்தியின் வெளிப்பாட்டைக் காட்டுகிறது எனத் தெரிவித்தார்.
தமிழக வெற்றி கழகம் குறித்து சீமான் அண்மையில் பேசியது தொடர்பான கேள்விக்கு, நான் அந்த விமர்சனத்திற்குள் செல்ல விரும்பவில்லை களத்தில் யார் இல்லை என்று மக்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார். மேலும் ஏதேனும் ஒரு கட்சிக்குக் காசு கொடுக்காமல் வாகனங்கள் ஏற்பாடு செய்யாமல் இவ்வளவு கூட்டம் வருமா என்று கேள்வி எழுப்பிய அவர் அப்படி என்றால் மக்கள் ஆதரவு யாருக்கு உள்ளது களத்தில் யார் இருக்கிறார்கள் என்று மக்களுக்கே தெரியும் எனத் தெரிவித்தார்.
SIR யைப் பொறுத்த வரை தமிழக வாக்காளர்கள் அனைவரும் அவர்களது பெயர்கள் அந்தப் பட்டியலில் உள்ளதா என்பதை சரி பார்த்துக்கொள்ள வேண்டும், பெயர் இல்லை என்றால் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டால் அனைத்து உதவிகளும் ஏற்பாடு செய்து தரப்படும் எனத் தெரிவித்தார். எங்களைப் பொறுத்தவரை அனைவருக்கும் ஓட்டுரிமை இருக்க வேண்டும் உண்மையான வாக்காளர்கள் நீக்கப்படக் கூடாது எனத் தெரிவித்தார்.
அதிமுக, பாஜக, விஜய் ஒரணியில் இருப்பது சாத்தியம் என்று தமிழருவி மணியன் கூறியது தொடர்பான அது அவருடைய கருத்து அவரது அறிவுரை எங்களுக்குத் தேவையில்லை அவருடைய அறிவுரை யாருக்கு தேவையோ அவருக்குக் கொடுத்தால் போதும் எனத் தெரிவித்தார்.
அரசியல் அறிவை யாரும் குறைவாக எடை போட வேண்டாம் உரிய நேரத்தில் உரிய முடிவுகள் எடுக்கப்படும் என கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நாங்கள் தற்பொழுது வரை ஆரம்பிக்கவில்லையெனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “விஜய் அருகில் நின்னா தூய்மை ஆகிடுவாங்களா?” – சிபிஐ வீரபாண்டியன் கேள்வி!