ஆகஸ்ட் 17ஆம் தேதி சிறப்பு பொதுக்குழு கூட்டமானது நடைபெறும் என்று ராமதாஸ் அறிவித்திருக்கக்கூடிய நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி பாமகாவினுடைய பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அன்புமணி அறிவித்திருந்தார். இதனை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ராமதாஸ் ஆதரவு மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மாலை அன்புமணி ராமதாஸ், அவரது தந்தை ராமதாஸ் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தார். இருப்பினும் உடல்நலப் பிரச்சினை காரணமாக மருத்துவர் ராமதாஸ் காணொளி வாயிலாக வழக்கு விசாரணையின் போது ஆஜரானார்.
இருவரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்திய நிலையில்,பொதுக் குழுவுக்கு தடைகோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அன்புமணியின் பொதுக் குழுவுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் திட்டமிட்டப்படி பொதுக்குழு கூட்டமானது அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக உட்கட்சியில் ஏற்பட்டிருக்கக்கூடிய பிரச்சனைகள் அதாவது பாமகனுடைய தலைமை யாருக்கு?, அதிகாரம் யாருக்கு? என்கின்ற பல்வேறு குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் பொதுக்குழுவின் மூலமாக அதற்கு தெளிவு காணும் விதமாக அன்புமணி ராமதாஸ் தலைமையில் இந்த பொதுக்குழுவானது கூடியிருக்கிறது. இதில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் யாருடைய தீர்மானத்தை ஆதரிக்கிறார்களோ அவர்களுக்கு தான் அதிகாரம் என்கின்ற ஒரு நிலை உருவாக இருக்கக்கூடிய சூழலில், தற்போது பாமகவில் நிறைவேற்றப்பட இருப்பதற்காக என்னென்ன தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது என்கின்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
பாமகவின் தலைவராக தற்போது இருக்கக்கூடிய அன்புமணி ராமதாஸ் நீடிக்க வேண்டும் என்ற வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி யாருடன் வைப்பது என்பது தொடர்பான அதிகாரம் அன்புமணிக்கு வழங்கப்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு தமிழக பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல்வேறு கண்டன தீர்மானங்களையும் நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: நேரில் ஆஜரான அன்புமணி... காணொலியில் ராமதாஸ் - நீதிபதி முன்பு நடந்தது என்ன?
குறிப்பாக உட்கட்சியில் ஏற்பட்டிருக்கக்கூடிய பிரச்சனைகள் அதாவது பாமகனுடைய தலைமை யாருக்கு?, அதிகாரம் யாருக்கு? என்கின்ற பல்வேறு குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் பொதுக்குழுவின் மூலமாக அதற்கு தெளிவு காணும் விதமாக அன்புமணி ராமதாஸ் தலைமையில் இந்த பொதுக்குழுவானது கூடியிருக்கிறது. இதில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் யாருடைய தீர்மானத்தை ஆதரிக்கிறார்களோ அவர்களுக்கு தான் அதிகாரம் என்கின்ற ஒரு நிலை உருவாக இருக்கக்கூடிய சூழலில், தற்போது பாமகவில் நிறைவேற்றப்பட இருப்பதற்காக என்னென்ன தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது என்கின்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: “பணத்தைக் கொடுத்து நிர்வாகிகளை வளைக்க பார்க்கிறார்” - அன்புமணி மீது ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு...!