பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெற்று 48 மணி நேரத்துக்குள்ளாகவே பிரதமர் நரேந்திர மோடி தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு “நெக்ஸ்ட் டார்கெட்” கொடுத்துவிட்டார். “இனி எங்களுடைய முழுக் கவனமும், முழு சக்தியும் தமிழக சட்டமன்றத் தேர்தலில்தான் இருக்கும். 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு பாஜக தொண்டனும் இப்போதே களத்தில் இறங்க வேண்டும்” என்று பிரதமர் மோடி நேரடியாக உத்தரவிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், இயற்கை வேளாண் ஆர்வலர்கள் கலந்து கொண்ட நிலையில், நிகழ்ச்சி முடிந்ததும் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எச்.ராஜா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளை தனியாக அழைத்து சுமார் 20 நிமிடங்கள் ரகசிய ஆலோசனை நடத்தினார்.
பாஜக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்த தகவல்: “பிரதமர் மிகுந்த உற்சாகத்தில் இருந்தார். பீகார் வெற்றியைப் பற்றி முதலில் பேசினார். ‘பீகாரில் நாம் எதிர்பார்த்ததை விட அதிக இடங்களை வென்றிருக்கிறோம். இது என் பிரசாரத்தின் வெற்றி மட்டுமல்ல, உங்கள் எல்லோருடைய கடின உழைப்பின் வெற்றி’ என்று கூறினார். உடனே தமிழகம் பற்றி பேச ஆரம்பித்தார்.
இதையும் படிங்க: இந்திராகாந்தி காலில் விழுந்து கதறிய தி.மு.க!! பயமுறுத்த பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் தாக்கு!

‘இப்போது அடுத்த இலக்கு தமிழகம். இங்கே நாம் இன்னும் பலமாக வேர் ஊன்ற வேண்டும். ஒவ்வொரு பூத் கமிட்டியையும் வலுப்படுத்த வேண்டும். புதிய வாக்காளர்களைச் சேர்க்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் மத்தியில் பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும்’ என்று ஒவ்வொரு விஷயமாக சொல்லிக் கொடுத்தார். ‘2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நாம் நல்ல அடித்தளம் போட்டுவிட்டோம். அதை இப்போது வலுப்படுத்தி 2026-ல் ஆட்சியைப் பிடிக்க வேண்டும்’ என்று தெளிவாகச் சொன்னார்.”
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட்டு 11.24% வாக்குகள் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது நினைவிருக்கட்டும். தற்போது பிரதமர் மோடியே நேரடியாக வியூகம் வகுத்து, தொடர்ச்சியாக தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்யவிருப்பதால், தமிழக அரசியலில் பெரும் புயல் வரப்போகிறது என்று பாஜக தொண்டர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
“2026-ல் தாமரை மலரும்!” – இதுவே இன்று தமிழக பாஜகவின் புதிய போர் முழக்கமாக மாறியிருக்கிறது.
இதையும் படிங்க: தவெக + பாஜக!! விஜயுடன் கூட்டணியா? மாறும் தேர்தல் கணக்குகள்! ஆக்ஷனில் இறங்கும் அமித்ஷா!