திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மீசநல்லூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் இருந்த மூன்று குழந்தைகள் பெயிண்டில் கலக்கும் தின்னரை குடித்ததில் மூன்று குழந்தைகள் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாற்றப்பட்டுள்ளனர்.
வந்தவாசி அடுத்த மீசநல்லூர் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது இந்த அங்கன்வாடி மையத்தில் 25க்கு மேற்பட்ட குழந்தைகள் கலைமணி என்பவர் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் இந்த அங்கன்வாடி மையத்தின் கட்டிடத்தை பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு ஊழியர்கள் வருகின்றனர். அப்போது பெயிண்டில் கலக்கும் தின்னரை அங்கன்வாடி மையத்தில் படித்து வரும் விஷ்ணு, சுதர்சன், மதன்ராஜ் ஆகிய மூன்று குழந்தைகள் தின்னரை குடித்துள்ளனர் இதனால் குழந்தைகளின் அலரி துடித்து கீழே விழுந்தனர் . அங்கிருந்தவர்கள் குழந்தைகளை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு 3 குழந்தைகளை அனுப்பி வைத்தனர்.
அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் கலைமணி என்பவர் குழந்தைகளை சரிவர கவனிக்காததால் கவன குறைவு காரணமாக மூன்று குழந்தைகள் பெயிண்ட் அடிக்கும் தின்னரை குடித்ததின் விளைவாக குழந்தைகள் தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் பணியாளர் கவனக்குறைவு காரணமாக குழந்தைகளின் பெற்றோர்கள் எந்த நம்பிக்கையுடன் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்புவார்கள் என்று குழந்தைகளின் பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதையும் படிங்க: “இப்ப நாங்க எங்க போவோம்...” - சமயபுரம் காவல் நிலையத்திற்கு பூட்டு போட்ட போலீசார்... புலம்பும் மக்கள்...!
மேலும் கவனக் குறைவு காரணமாக இருந்த அங்கன்வாடி பணியாளர் கலைமணி மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தயக்கம் காட்டிய ஸ்டாலின்... தட்டித்தூக்க முடிவெடுத்த எடப்பாடி பழனிசாமி... திருமாவால் திமுக கூட்டணிக்குள் கும்மாங்குத்து...!