திருச்சி மாவட்டம் சமயபுரம் கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம் முழுவதிலிருந்து தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
வருகை தரும் பக்தர்கள் ஒரு சிலர்களின் நகைகள், கைப்பைகள், செல்போன்கள் திருடு போவது வழக்கமாகி வருகிறது. இதற்காகவே அதே பகுதியில் சமயபுரம் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவு செயல்பட்டு வருகின்றன. மேலும் சமயபுரம் சுற்றியுள்ள மருதூர், நரசிங்கமங்கலம், கண்ணனூர், மாடக்குடி சேனையர் கல்லுக்குழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குற்றம் மற்றும் போக்குவரத்து சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு இங்கு தான் மக்கள் புகார்கள் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை 3 மணி அளவில் திடீரென சமயபுரம் காவல் நிலைய நுழைவு வாயில் மூடப்பட்டு இருந்தன . அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் காவல் நிலையத்துக்கு வருகை தந்த போது, சமயபுரம் சுற்றுவட்ட பகுதியில் உள்ள சிலர் மற்றும் கோவிலுக்கு வரும் ஒரு சில பக்தர்கள் அவர்கள் குறைகளை தெரிவிப்பதற்காக காவல் நிலையத்திற்கு வந்தபோது பூட்டியதால் பலரும் ஏன் காவல் நிலைய பூட்டப்பட்டுள்ளது என குழப்பம் அடைந்தனர்.
இதையும் படிங்க: தயக்கம் காட்டிய ஸ்டாலின்... தட்டித்தூக்க முடிவெடுத்த எடப்பாடி பழனிசாமி... திருமாவால் திமுக கூட்டணிக்குள் கும்மாங்குத்து...!
பொதுவாக காவல் நிலையம் 24 மணி நேரமும் மக்களுக்காக சேவை செய்யக்கூடிய காவல் நிலையம் ஏன் பூட்டப்பட்டது. யாரின் உத்தரவு பேரில் பூட்டப்பட்டது இதற்கு உயர் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பலர் அது கோரிக்கையாக உள்ளது
இது குறித்து காவல் ஆய்வாளர் இடம் சமூக ஆர்வலர்கள் தொலைபேசியில் அழைத்தபோதும் யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் பேசிய வருகின்றனர். அதேபோல் காவல் நிலையம் தொலைபேசி எண்ணையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: 2025-ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் ஹங்கேரிய எழுத்தாளர்..!!