தமிழகத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் மாண்புமிகு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, கர்நாடக காங்கிரஸ் அரசின் 'பிராக்ஸி கவர்ன்மென்ட்' (Proxy Government) ஆகச் செயல்படுகிறதா என்றும், தமிழ்நாட்டைச் சாராத ஒருவரை டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்ததன் மூலம் இந்த 'பொய்க்கால் குதிரை அரசு' ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிராகத் திரும்பியிருப்பது ஏன் என்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

திரைப்படத் தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணா அவர்களைத் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்துத் தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ள அரசாணை விவகாரம், கோட்டை வட்டாரத்தில் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ள தற்போதைய பரபரப்பான அரசியல் சூழலில், அதிமுக தலைமை அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கப்பட்டுள்ளன. அதிமுக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையின் விவரப்படி, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே மிக முக்கிய உள்கட்டமைப்புப் பாலமாக இருந்து தமிழகத்தின் குரலை டெல்லியில் ஒலிக்க வேண்டிய அதிமுக்கியத்துவம் வாய்ந்த பதவிக்கு, தமிழகத்திற்கு எவ்விதச் சம்பந்தமும் இல்லாத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு திரைப்பட தயாரிப்பாளரைத் தூக்கிக் கொடுத்திருப்பது ஏன் என்று கேட்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவில் அதிரடி மாற்றம்! எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதனுக்கு மீண்டும் துணை பொது செயலாளர் பதவி!

இதுகுறித்து முதலமைச்சர் விஜய்யை நேரிடையாகச் சாடியுள்ள அதிமுக, உங்களது திரையுலக வாழ்வின் இறுதிப் படமான, இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவராத 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்ற ஒரே ஒரு தகுதி (Credential) இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டின் மிக உயரிய அரசுப் பதவிகளை அள்ளி வழங்கி அழகு பார்ப்பீர்களா @actorvijay? அதுவும் குறிப்பாக, தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே ப் பிரச்சினை மிகத் தீவிரமாக நிலவி வரும் இந்த இக்கட்டான காலகட்டத்தில், தமிழகத்தில் உள்ள இந்த பொய்க்கால் குதிரை அரசின் போக்கு ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைப்பதாகவே அமைந்துள்ளது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசின் மெத்தனப் போக்கைச் சாடியுள்ள அ.தி.மு.க., புதிய ஆணையம் என்ற பெயரில் தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை நிலைநாட்டும் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பையே அடியோடு மழுங்கடிக்கும் வகையில், ஒரு தந்திரமான இடைச்செருகல் தீர்மானத்தைச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றியதுதான் இந்த ஆச்சரியக்குறி அரசின் சாதனை. தற்பொழுது ஒருபடி மேலே போய், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, பெங்களூரில் தனது தலைமை அலுவலகத்தை வைத்துத் திரைப்படம் தயாரிக்கும் ஒரு தனிநபரைத் தமிழ்நாடு அரசின் உத்தியோகபூர்வப் பிரதிநிதியாக டெல்லிக்கு அனுப்புவது எப்படி தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமைகளைக் காக்கும் என்பதை இன்றைய முதலமைச்சர் மக்களுக்கு விளக்கியே ஆக வேண்டும். தமிழகத்தை வஞ்சிக்கும் இந்தத் தவறான அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று பேரவை விதிகளுக்கு அப்பாற்பட்டுத் தங்களது கடுமையான எதிர்ப்பை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு மோசமான அரசியல் - வைகோ ஆவேசம்!