நடிகரும் அதிமுக முன்னாள் நிர்வாகியுமான அஜய் வாண்டையார் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பரத்குமாரிடம் 2.11 கோடி ரூபாய் பெற்று ஏமாற்றியதாக புகார் எழுந்தது. அரசிடமிருந்து சிறப்பு சலுகைகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வாங்கியதாகவும், பணத்தைத் திருப்பிக் கேட்டபோது மிரட்டியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த வழக்கில் அஜய் வாண்டையாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்தது. இதற்கு முன்னதாகவே, அஜய் வாண்டையார் மீது பட்டினப்பாக்கம் மற்றும் எழும்பூர் காவல் நிலையங்களில் மதுபோதையில் வன்முறையில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

2020ஆம் ஆண்டு எழும்பூரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் மது அருந்தி தகராறில் ஈடுபட்டதாகவும், விடுதி ஊழியர்களைத் தாக்கியதாகவும் புகார் எழுந்தது. 2025 மே 22 ஆம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தகராறில், ராஜா என்பவருக்கு ஆதரவாக அஜய் வாண்டையார் காவல் நிலையத்தில் காவலர்களுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், இதனால் அவர் தேனியில் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக அஜய் வாண்டையார் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது,
இதையும் படிங்க: ஈபிஎஸ்-ஐ தொடர்ந்து ஓபிஎஸ் சுற்றுப்பயணம்? யாருக்கு ஆதரவு? விரைவில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!!

அஜய் வாண்டையார் மற்றும் அவரது கூட்டாளி பிரசாத் ஆகியோர், நில உரிமையாளர்களை மிரட்டி, வெளிநாட்டவர்களுக்கு சொந்தமான நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக புகார் எழுந்தது. அப்படி மட்டுமல்லாது போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகவும், குறிப்பாக கோகைன் விற்பனை தொடர்பாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில், பண மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, அஜய் வாண்டையாரை ஒருநாள் போலீஸ்க்காவில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய, அஜய் வாண்டையார் உட்பட நான்கு பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுகவுக்கு குல்லா! 210 தொகுதி நம்ப பக்கம் தான்… இபிஎஸ் ஃபயர் ஸ்பீச்!