ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இன்று அதிகாலை இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தீவிரவாதிகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 17 தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், பாகிஸ்தான் ஆட்டம் கண்டுள்ளது.

இந்திய ராணுவத்தினரின் இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை அதன் வேரில் இருந்து அழிப்பதற்கு பாரதம் உறுதியாக உள்ளது என அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஆப்ரேஷன் சிந்தூர் துல்லிய தாக்குதல்! பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு ஆலோசகர் முக்கிய ஆலோசனை!

இந்திய ராணுவத்தை என்னை பெருமை அடைவதாக தெரிவித்த அவர், பகல்காமில் அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதிலடி இது என்றும் கூறினார். மேலும், இந்தியா மற்றும் இந்திய மக்கள் மீதான எந்த ஒரு தாக்குதலுக்கும் தக்க பதிலடி கொடுப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: இந்திய ராணுவத்திற்கு தமிழ்நாடு துணை நிற்கும்! முதலமைச்சர் ஸ்டாலின் ஆதரவு