மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் விஜய் கொண்டு வந்த தனி தீர்மானத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். முதலமைச்சரின் தனி தீர்மானத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தமிமுன் அன்சாரி வலியுறுத்தினார். காவிரி விவகாரம் நான்கு மாநில மக்கள் என் தொடர்பு உடையது என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு சார்பில் கர்நாடக அரசு மீது உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு கூறியுள்ளது. முதல்வர் முன்மொழிந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவை தெரிவிப்பதாக பேரவையில் காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மேகதாது குறித்த முதலமைச்சர் தனி தீர்மானத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவிப்பதாக அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார். மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு தெரிவித்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க முதலமைச்சரின் தனி தீர்மானத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வன்னியரசு கூறினார்.
இதையும் படிங்க: ஆரம்பமே அதிரடி..! மேகதாதுவுக்கு எதிர்ப்பு..! பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் விஜய்..!
இந்தியாவின் கடைமடை பகுதியான தமிழகம் நீரியல் தேவைக்காக மற்ற மாநிலங்களிடம் போராட வேண்டிய சூழல் இருப்பதாகவும், நீர் பிரச்சனையை தீர்க்க நதிகளை இணைப்பது அவசியம் என்ற அம்பேத்கர் கூறியதை சுட்டிக்காட்டி அமைச்சர் வன்னியரசு பேசினார். முதலமைச்சர் முன்மொழிந்த மேகதாத தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவித்தது. மேகதாது அணை கட்டினால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் பாலைவனமாக மாறும் என்று எம்எல்ஏ தளி ராமச்சந்திரன் தெரிவித்தார். கர்நாடக காங்கிரஸ் அரசரின் தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்பு கொண்டு இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும் ஆதரவு அளித்துள்ளது. மேலும் மனிதநேய மக்கள் கட்சியும் ஆதரவு தருவதாக ஜவாஹிருல்லா அறிவித்தார்.
இதையும் படிங்க: சட்டசபை 2 ஆம் நாள் அமர்வு... மறைந்த முன்னோடிகளுக்கு மரியாதை... ஒருமனதாக தீர்மானங்கள்..!!