ராமேஸ்வரம் கோதண்ட ராமர் கோவில் அருகே ராமர் இலங்கைக்கு சீதையை மீட்க செல்லும்போது மிதக்கும் கற்களை பயன்படுத்தியதாக கூறி சுற்றுலா பயணிகளிடம் விதியை மீறி வசூல் செய்வதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அதனை அப்புறப்படுத்த வந்த கோவில் ஊழியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வேலையை செய்து வரும் குடும்பத்தினர் சார்பாக தனுஷ்கோடி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்து வந்த போலீசாரோடு போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவியது.
உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் ராமநாத ஸ்வாமி தரிசித்த பின்னர் தனுஷ்கோடி செல்லும் வழியில் அமைந்துள்ள கோதண்ட ராமர் கோவிலுக்கு சென்று அங்கும் வழிபாடு செய்து தனுஷ்கோடிக்கு சுற்றுலா செல்வது யாத்திரிகர்களின் பிரதான பயணத்திட்டமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தனுஷ்கோடி செல்லும் சாலையில் கோதண்ட ராமர் கோவில் அருகே இதிகாச காலங்களில் சொல்லப்பட்டதை போல ராமர் சீதையை மிக்க இலங்கைக்கு செல்லும்போது மிதக்கும் கற்களை பயன்படுத்தி கடலில் பாலம் அமைத்ததாகவும் அதன் எச்சம் எனக் கூறி வரக்கூடிய யாத்திரிகர்களிடம் சிலர் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதனை அதிகாரிகள் தரப்பில் அப்புறப்படுத்த முயன்ற போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வேலையை செய்து வரும் குடும்பத்தினர் சார்பில் ராமேஸ்வரம் தனுஷ்கோடி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: சிறுமியின் முகத்தை கடித்து குதறிய “BULL DOG”... வளர்ப்பு நாயால் நேர்ந்த துயரம்!
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். இந்த நிலையில் அவர்களை கைது செய்ய முயன்ற போலீசாருக்கும் அந்த போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமானது ஈடுபட்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், ஏற்கனவே கொண்டு வந்திருந்த வாட்டர் கேன்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணைய போலீசார் மீது ஊற்றியதால் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: சிரியாவில் மீண்டும் வெடித்த உள்நாட்டு மோதல்.. இடைக்கால அரசுக்கு சவால்.. தள்ளாடும் அரசாட்சி..