பல்கேரியாவைச் சேர்ந்த பிரபல ஜோதிடரான பாபா வாங்கா, தனது கணிப்புகளுக்கு மிகவும் பிரபலமானவர். அவரது ஜோதிட கணிப்புகள் கிட்டத்தட்ட எப்போதும் உண்மையாகி வந்துள்ளது. அமெரிக்காவில் 9/11 தாக்குதல்கள், உயிரி ஆயுதங்களால் உலக அழிவு மற்றும் கோவிட் தொற்றுநோய் பரவல் போன்ற பல விஷயங்களை பாபா வாங்கா சரியாக கணித்து கூறியுள்ளார். இவருடைய கணிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகி உலக அளவில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது.
மூன்றாம் உலகப் போர்:
2025 ஆம் ஆண்டில் பல நாடுகளில் போர்கள் வெடிக்கும் என்று கூறியுள்ள பாபா வாங்கா, 2026 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று கணித்துள்ளார். இந்த முறை, 2026 ஆம் ஆண்டு பயங்கரமாக இருக்கும் என்றும், மூன்றாம் உலகப்
இதையும் படிங்க: ஹை..!! 2026ல இத்தனை லீவு இருக்கா..!! லிஸ்ட்டை வெளியிட்ட தமிழக அரசு..!!
போர் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார். இயற்கை பேரழிவுகள், பொருளாதார நெருக்கடிகள், கட்டுப்பாடற்ற செயற்கை நுண்ணறிவு போன்ற பல ஆபத்துகள் 2026 ஆம் ஆண்டில் ஏற்படப் போவதாகவும், இதனால் 2026 மிகவும் ஆபத்தான ஆண்டாக மாறும் என்றும் பாபா வாங்கா கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
AI-யால் வேலையிழப்பு:
தங்கத்தின் விலையில் மிகப்பெரிய உயர்வு, செல்போன்களால் மக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவால் மில்லியன் கணக்கான வேலைகள் இழப்பு ஆகியவை பாபா வாங்காவின் கணிப்புகளில் உள்ள முக்கிய அம்சங்களாகும் .
கிழக்கில் தொடங்கும் ஒரு போர் மேற்கத்திய நாடுகளை பலவீனப்படுத்தும் என்றும், ரஷ்யாவிலிருந்து உருவாகும் ஒரு சக்திவாய்ந்த தலைவர் உலகை ஆள்வார் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார்.
வேற்றுகிரகவாசிகளுடனான தொடர்பு:
மிகப்பெரிய வெள்ளம், பெரிய பூகம்பங்கள் மற்றும் காலநிலையில் கடுமையான மாற்றங்களுக்கு வழிவகுக்கும். 2026 ஆம் ஆண்டில், மனிதர்கள் வேறொரு உலகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி, வேற்றுகிரகவாசிகளுடன் பேசுவார்கள் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்.
தற்போதைய உலக நிலைமைக்கு ஏற்ப, 2026 ஆம் ஆண்டு உலகிற்கு ஒரு பயங்கரமான ஆண்டாக இருக்கும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். 2025 இரண்டு மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டிற்கான பாபா வாங்காவின் ஜோதிட கணிப்புகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: போலீஸ் வாகனம் மோதி தூக்கியடிக்கப்பட்ட டூவீலர் ... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துடிதுடித்து பலி...!