பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகாரில் தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 தேதி அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் பீஹார் முதலமைச்சராக உள்ளார். இவர் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார். தேதற்போதுசிய ஜனநாயக கூட்டணி பீகார் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்று முன்னதாக அறிவித்தது.

பீகாரில் என்டிஏ கூட்டணி சார்பில் பாஜக மற்றும் நிதீஷ்குமாரின் ஜே.டி.யூ தலா 101 தொகுதிகளில் வேட்பாளர்களை போட்டியிட நிறுத்துவதாக அறிவித்திருந்தது. என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் பெரும்பாலான எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: இந்தியா விரைவில் நக்சல் தீவிரவாதம் இல்லாத நாடாக மாறும்..!! பிரதமர் மோடி உறுதி..!!
பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. பெரும் சர்ச்சைக்கு இடையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பிஹாரில் வரும் 24 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதமரே உரிமையை மீட்டு தாங்க... கச்சத்தீவு மீட்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!