கிருஷ்ணகிரி: தமிழகத்தில் வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியையும், அதன் தலைவர் நடிகர் விஜயையும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “விஜய் எதை வேண்டுமானாலும் பேசலாம். இந்தியாவையே நாளை கைப்பற்றி விடுவேன் என்றுகூட சொல்லலாம். ஆனால் இது சினிமா அல்ல, அரசியல். தேர்தல் தேதி அறிவிக்கப்பட வேண்டும். வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். அந்த வேட்பாளர்கள் விலை போகாமல் இருக்க வேண்டும். பூத் பொறுப்பாளர்கள் விலை போகாமல் இருக்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும் அவர், “தவெகவுக்கு பூத் பொறுப்பாளர்களே இல்லை. கட்சிக் கட்டமைப்பே இல்லை. யார் வேட்பாளர் என்று அவர்களால் சொல்ல முடியுமா? 234 தொகுதிகள் உள்ளன. வரிசையாக 10 அல்லது 15 வேட்பாளர்களின் பெயர்களை விஜயால் சொல்ல முடியுமா? சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்” என்று சவால் விடுத்தார்.
இதையும் படிங்க: திமுகவா? தவெகவா? மதுரையில் யார் கொடி பறக்கும்? நிர்வாகிகளுக்கு தூண்டில் போடும் வேலை ஜரூர்!

விஜய்க்கு மக்கள் செல்வாக்கு இருப்பதை மறுக்கவில்லை என்று கூறிய நயினார், “ஆனால் பாஜக மிகப்பெரிய கட்சி. நாடாளுமன்றத்தில் 272 உறுப்பினர்கள் உள்ளனர். மூன்று முறை பிரதமராக பொறுப்பு வகித்த மோடியின் திறமை, புகழ், சக்தி எல்லாம் ஒரு பக்கம் இருக்கிறது. தமிழகத்தில் சினிமா நடிகராக இருக்கும் விஜய்க்கு அது எங்கே இருக்கிறது? மக்கள் இதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
விஜயின் அரசியல் பிரவேசத்தையும் தவெகவின் தேர்தல் தயாரிப்பையும் பாஜக தரப்பில் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில், நயினார் நாகேந்திரனின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிக்கலில் விஜய்! தவெகவின் ஆணிவேரை அசைக்க திமுக திட்டம்!! பக்கா ஸ்கெட்ச்!