இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்த வருகிறது. ஆனால், அடங்காமல் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்தாலும் அதனை இந்தியா தகர்த்தும் வருகிறது. இந்த நிலையில் நேற்று காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதனால் காஷ்மீர் எல்லையோர மாவட்டங்கள் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது போர் பதற்றம் காரணமாக தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற வந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது

எனவே, ஐபிஎல் போட்டி தொடர்ந்து நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் ஒரு வார காலத்திற்கு மட்டும் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட ஆலோசனைக்கு பிறகு போட்டிக்கான விவரங்கள் அல்லது முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடத்தினால் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உச்சக்கட்ட போர் பதற்றம்; டெல்லி முழுவதும் பறந்த அதிரடி உத்தரவு...!

பாகிஸ்தான் மின்னஞ்சல் போல் உருவாக்கப்பட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியை நடத்தினால் ரத்த ஆறு ஓடும் என அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லி கிரிக்கெட் வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொண்டாட்டத்தை விட பாதுகாப்பே முக்கியம்..! அசாம் மக்களுக்கு மாநில முதல்வர் சொன்ன அறிவுரை..!