• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை... சென்னையின் தற்போதைய நிலவரம் என்ன? - மாநகராட்சி ஆணையர் சமீரன் சொன்ன முக்கிய தகவல்...!

    இன்று காலையிலும் புதிய குழு ஒன்று களத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, 24 மணி நேரமும் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம்.
    Author By Amaravathi Wed, 21 Oct 2026 08:00:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai corporation commissioner Sameeran explanation

    சென்னையில் நேற்று இரவு முதலே கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: வளசரவாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி, அடையாறு, கோடம்பாக்கம், ஏஜிஎஸ் காலனி போன்ற பகுதிகளில் 10 சென்டிமீட்டருக்கு மேல் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதிக மழைப்பொழிவு பதிவான இந்த இடங்களில் நேற்று இரவு சிறிய அளவிலான மழைநீர் தேக்கங்கள் காணப்பட்டன.

    இன்று விடுமுறை முடிந்து பொதுமக்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னைக்குப் பயணம் மேற்கொள்ளும் நாளாக இருப்பதாலும், பள்ளிகள் இன்று திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்ததாலும், நேற்று கூடுதலாகப் பணிக்குழுக்களை நியமித்தோம். கிட்டத்தட்ட 1,371 அதிக குதிரைத்திறன் கொண்ட மோட்டார்களை நேற்று பல்வேறு இடங்களில் செயல்படுத்தினோம். மேலும், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 15,000 களப்பணியாளர்களைப் பணியில் ஈடுபடுத்தினோம்.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி, ஏஜிஎஸ் காலனியைத் தவிர வேறு எந்த இடத்திலும் பெரிய அளவிலான மழைநீர் தேக்கம் இல்லை. பெரம்பூர் சுரங்கப்பாதை, கெங்குரெட்டி சுரங்கப்பாதை உள்ளிட்ட மூன்று சுரங்கப்பாதைகளில் நேற்று இரவு தண்ணீர் தேங்கியிருந்தது. இன்று காலை அந்த மூன்று சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்தைச் சீரமைத்து, அவற்றைப் போக்குவரத்துக்குத் தயாராக வைத்திருக்கிறோம்.

    இதையும் படிங்க: #BREAKING சென்னை மக்களே இனி தான் ஆட்டம் ஆரம்பம்... வேலைக்கு போறவங்க மறக்காமல் குடையை எடுத்துக்கோங்க...!

    சென்னையில் 420 முக்கியப் பேருந்து வழித்தடச் சாலைகள் உள்ளன. அவை அனைத்தும் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலையிலும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, மாவட்ட ஆட்சியர் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளார். பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கூடுதல் மோட்டார்களைப் பயன்படுத்தத் தயாராக இருந்தோம்.

    மழைப்பொழிவு வரும் 22ஆம் தேதி வரை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் பொதுமக்களுக்கு நாங்கள் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், தண்ணீர் அதிகமாக ஓடும் பகுதிகள், ஆற்றுப் பகுதிகள் மற்றும் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளைத் தவிர்க்க வேண்டும். வீடியோ எடுப்பதற்காகவோ, வேடிக்கை பார்ப்பதற்காகவோ ஆற்றுப் பகுதிகளை அணுகக் கூடாது.

    மின்சாரக் கட்டமைப்புகள், மின்மாற்றிகள், மின்சாரப் பெட்டிகள் போன்றவை அமைந்துள்ள பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். வீடுகளில் உள்ள மின்சாரக் கருவிகளையும் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.

    நேற்றைய மழை நிலவரத்தைப் பொறுத்தவரை, சில இடங்களில் 73.8 மில்லிமீட்டர் அளவுக்கு மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. நான் குறிப்பிட்ட ஐந்து அல்லது ஆறு இடங்களில் 10 சென்டிமீட்டருக்கு மேல் மழை பதிவாகியுள்ளது. இருப்பினும், பொதுமக்களுக்கு எந்தவிதமான சிரமமும் ஏற்படக் கூடாது என்பதற்காக, காலையில் வழக்கம்போல அனைத்துப் பணிகளும் நடைபெற வேண்டும் என்றும், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளும் பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, நேற்று கூடுதல் பணிக்குழுக்களை நியமித்து, இரவு முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டோம். அமைச்சர்களும் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இன்று அதிகாலையிலும் சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேற்று நள்ளிரவில் ஆய்வு செய்தார்.

    கூடுதல் பணிக்குழுக்களைப் பணியில் ஈடுபடுத்தியதன் மூலமாகவும், அதிக குதிரைத்திறன் கொண்ட பம்ப் செட்களைப் பல்வேறு இடங்களில் பயன்படுத்தியதன் மூலமாகவும், சுரங்கப்பாதைகளைத் தொடர்ந்து கண்காணித்ததன் மூலமாகவும் இன்று காலை போக்குவரத்துக்கு எந்தப் பெரிய சிரமமும் ஏற்படவில்லை.

    தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாகவும் சில எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இதனை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். எங்கள் குழுக்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இன்று காலையிலும் புதிய குழு ஒன்று களத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, 24 மணி நேரமும் நிலைமையைக் கண்காணித்து வருகிறோம்.

    தற்போது மழைநீர் தேங்கியுள்ள முக்கியமான இடம் ஏஜிஎஸ் காலனி மட்டுமே. அங்கு மூன்று அதிக குதிரைத்திறன் கொண்ட மோட்டார்கள் மூலம் வீராங்கல் ஓடைக்கு மழைநீர் பம்ப் செய்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நேற்று மாலை 5 மணி வரையிலான நிலவரப்படி, மொத்தம் 1,200 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மழைநீர் தேங்குதல் தொடர்பான புகார்கள். மரங்கள் விழுந்தது தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. தெருவிளக்குகள் எரியவில்லை என்பது தொடர்பாகவும் புகார்கள் வந்துள்ளன. இவைதான் முக்கியமான மூன்று வகையான புகார்கள்.

    மழைநீர் தேங்குதல் தொடர்பான பெரும்பாலான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மரங்கள் விழுந்தது தொடர்பான புகார்களிலும் மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. தெருவிளக்குகள் எரியவில்லை என்ற புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள் தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம் என்றார். 

    இதையும் படிங்க: #BREAKING சென்னை மக்களே இனி தான் ஆட்டம் ஆரம்பம்... வேலைக்கு போறவங்க மறக்காமல் குடையை எடுத்துக்கோங்க...!

    மேலும் படிங்க
    "வீர வணக்கங்கள்"..! காவலர் நினைவு நாள்..! முதல்வர் விஜய் மரியாதை..!!

    "வீர வணக்கங்கள்"..! காவலர் நினைவு நாள்..! முதல்வர் விஜய் மரியாதை..!!

    தமிழ்நாடு
    சர்ரென குறைந்த தங்கம், வெள்ளி விலை..!! குஷியில் மக்கள்..!! இன்றைய நிலவரம் என்ன..??

    சர்ரென குறைந்த தங்கம், வெள்ளி விலை..!! குஷியில் மக்கள்..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    மக்களே உஷார்! சென்னையை நோக்கி நகரும் கனமழை மேகங்கள்!! 150 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு?!

    மக்களே உஷார்! சென்னையை நோக்கி நகரும் கனமழை மேகங்கள்!! 150 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு?!

    தமிழ்நாடு

    'படையப்பா 2' படத்தை ரஜினி ஏன் நிராகரித்தார்..!! கே.எஸ். ரவிக்குமார் சொன்ன சுவாரசிய விளக்கம்..!

    சினிமா
    ரவுடி சுள்ளான் மதன் கொலை..! மேலும் 4 பேர் அரெஸ்ட்..! அடுத்தடுத்து அதிரடி காட்டும் தனிப்படை..!

    ரவுடி சுள்ளான் மதன் கொலை..! மேலும் 4 பேர் அரெஸ்ட்..! அடுத்தடுத்து அதிரடி காட்டும் தனிப்படை..!

    தமிழ்நாடு
    அனிருத் - காவ்யா திருமணம் மூலம் உண்டான சர்ப்ரைஸ்..!! மு.க.ஸ்டாலினுக்கு நெருங்கிய சொந்தமாகும் ரஜினிகாந்த்..!!

    அனிருத் - காவ்யா திருமணம் மூலம் உண்டான சர்ப்ரைஸ்..!! மு.க.ஸ்டாலினுக்கு நெருங்கிய சொந்தமாகும் ரஜினிகாந்த்..!!

    சினிமா

    செய்திகள்

    "வீர வணக்கங்கள்"..! காவலர் நினைவு நாள்..! முதல்வர் விஜய் மரியாதை..!!

    தமிழ்நாடு
    மக்களே உஷார்! சென்னையை நோக்கி நகரும் கனமழை மேகங்கள்!! 150 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு?!

    மக்களே உஷார்! சென்னையை நோக்கி நகரும் கனமழை மேகங்கள்!! 150 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு?!

    தமிழ்நாடு
    ரவுடி சுள்ளான் மதன் கொலை..! மேலும் 4 பேர் அரெஸ்ட்..! அடுத்தடுத்து அதிரடி காட்டும் தனிப்படை..!

    ரவுடி சுள்ளான் மதன் கொலை..! மேலும் 4 பேர் அரெஸ்ட்..! அடுத்தடுத்து அதிரடி காட்டும் தனிப்படை..!

    தமிழ்நாடு
    தி.நகர் வெள்ள தடுப்புப் பணிகள்.! எங்கெல்லாம் பாதிப்பு..!! பைக்கில் சென்று அமைச்சர் ஆனந்த் ஆய்வு..!!

    தி.நகர் வெள்ள தடுப்புப் பணிகள்.! எங்கெல்லாம் பாதிப்பு..!! பைக்கில் சென்று அமைச்சர் ஆனந்த் ஆய்வு..!!

    தமிழ்நாடு
    நாதக கார்த்திகாவுக்கு ரிமாண்ட்.! அதிகாலை கைதும்... 15 நாள் சிறையும்..! பரபரக்கும் தாராபுரம்..!

    நாதக கார்த்திகாவுக்கு ரிமாண்ட்.! அதிகாலை கைதும்... 15 நாள் சிறையும்..! பரபரக்கும் தாராபுரம்..!

    தமிழ்நாடு
    இவங்க படுத்துற பாடு இருக்கே... அடாத மழையிலும் விடாமல் சென்னை திரும்பும் மக்கள்... திணறும் ஜிஎஸ்டி சாலை...!

    இவங்க படுத்துற பாடு இருக்கே... அடாத மழையிலும் விடாமல் சென்னை திரும்பும் மக்கள்... திணறும் ஜிஎஸ்டி சாலை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share