காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பு ஒரு சமூகத்தின் அமைதி, ஒழுங்கு மற்றும் நீதியைப் பேணுவதற்கு முக்கியமான அடித்தளமாக விளங்குகிறது. இந்த உறவு பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் ஒத்துழைப்பின் மீது கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை, காவல்துறை என்பது சமூகத்தில் சட்டத்தை அமல்படுத்துவதற்கும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அமைப்பாகும்.
இருப்பினும், காவல்துறை மற்றும் மக்களுக்கு இடையேயான உறவு எப்போதும் சுமுகமாக இருப்பதில்லை. இதில் பல சவால்கள், தவறான புரிதல்கள் உள்ளன. சில சமயங்களில், காவலர்கள் மக்களுடன் முரட்டுத்தனமாக நடந்துகொள்வது அல்லது பக்கச்சார்பாக செயல்படுவது போன்ற நிகழ்வுகள் இந்த அவநம்பிக்கையை மேலும் ஆழப்படுத்துகின்றன.

இருப்பினும் மக்களுக்கான உற்ற துணையாகவும் காவல்துறையினரே இருக்கின்றனர். சில நேரங்களில் இரு தரப்பினர் இடையே சுமூகமற்ற சூழலை காட்டுவதாக அமைகிறது. சென்னை ஓட்டேரியில் வங்கி அதிகாரி ஒருவர் காரில் சென்றதாக தெரிகிறது. அவரை போலீசார் நிறுத்திய போது தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் காவலர் வங்கி அதிகாரியை கீழே தள்ளியதில் அவர் உயிரிழந்ததாக பகிர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: விஜய்யின் நீலாங்கரை வீட்டில் போலீசார்.. காரணம் என்ன..??
இருப்பினும் குடிபோதையில் அவர் மயங்கி கிடந்ததாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போலீஸ் கீழே தள்ளியதில் வங்கி அதிகாரி உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து ஓட்டேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வேலூர்: 4 வயது சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம்.. மேலும் சிக்கிய ஒருவர்.. போலீசார் அதிரடி..!!