மலையாள எழுத்தாளரின் ஆவண நூலை தமிழின் திறம்பட மொழிபெயர்ப்பதற்காக நிலையைச் சேர்ந்த பேராசிரியர் விமலாவிற்கு சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள எழுத்தாளர் நளினி ஜமீலா எழுதிய எண்ட ஆண்கள் என்ற ஆவண நூலை தான் பேராசிரியை விமலா மொழிபெயர்த்துள்ளார்.

எழுத்தாளர் நளினி ஜமீலாவின் வாழ்க்கை அனுபவத்தை வெளிப்படுத்தும் முக்கியமான வரலாற்று நூலாகிய இது இந்திய சமூகத்தில் பாலின சமத்துவம், பெண்களின் உரிமை, அவரது போராட்டங்கள் என பல முக்கிய அம்சங்களை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: நாளை பார்லிமென்ட்., இன்று எம். பி.க்கள் கூட்டம்! முதல்வரின் புதிய ரூட்!

இந்த நூலை தனித்துவமான தமிழாக்கத்தின் மூலமாகவும் விரிவான இலக்கிய நயத்துடனும் மொழிபெயர்த்துள்ளார் பேராசிரியை விமலா. அந்த நூலில் உள்ள உண்மையான உணர்வுகளை தமிழில் படிப்பவர்கள் நேர்த்தியாக புரிந்து கொள்ளும் வகையில் மொழிபெயர்ப்பு செய்து உள்ள பேராசிரியை விமலாவிற்கு சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சாகித்திய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள நெல்லையைச் சேர்ந்த பேராசிரியை விமலாவிற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,எனது ஆண்கள்' நூலுக்காக 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுக்குத் தேர்வாகி இருக்கும் திருமிகு ப. விமலா அவர்களுக்கு எனது பாராட்டுகள்.

கல்விப்புலத்தில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும் தங்களின் பாராட்டத்தக்க பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அமித் ஷா வைத்த செக்..! தமிழில் பொறியியல், மருத்துவப் படிப்புகள் இருக்கிறதா..? உண்மை நிலை என்ன..? கேள்விகளும் விளக்கங்களும்..!