தமிழ் சினிமாவில் வம்சம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி. வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக மெளன குரு, டிமான்டி காலனி 1 அண்ட் 2 ஆகிய படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டது. இவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், மு. க. தமிழரசுவின் மகனும் ஆவார்.
சமீபத்தில் படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்ற அருள்நிதிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. வலி அதிகரிப்பு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருள்நிதிக்கு, காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: நியாபகம் வெச்சுக்கோங்க..!! நெல்லையில் தோற்றால் பதவி பறிக்கப்படும்.. முதல்வர் ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட் வார்னிங்..!!
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருள்நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் உடல்நிலை மற்றும் அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அவருடன் எம்பி ஆ ராசா உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #BREAKING மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்... தேவர் சிலைக்கு மரியாதை...!