தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார் சி. ஜோசப் விஜய். நேற்று நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தின் நினைவுகளை மீண்டும் எழுப்பியதோடு, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. முதலமைச்சர் விஜய் கரூருக்கு வருகை தந்ததன் முக்கிய நோக்கம், கடந்த ஆண்டு தன் கட்சியின் பிரச்சார நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை சந்திப்பதும், அவர்களுக்கு ஆறுதல் கூறுவதும், உதவிகளை வழங்குவதும்தான். நிகழ்ச்சியில் 31 பேருக்கு அரசு வேலை நியமன ஆணைகளை நேரடியாக வழங்கினார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 20 லட்சம் ரூபாய் இழப்பீட்டை உறுதிப்படுத்தினார். கரூர் சம்பவத்திற்கு ஒரு நினைவிடம் அமைக்கவும் அறிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், கரூர் துயரம் தன்னை இன்னும் வாட்டுவதாக உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தார். திமுகவும் அதிமுகவும் கூட்டு களவாணிகள் என தெரிவித்தார். திமுகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ஆனால், முதல்வர் விஜயின் பேச்சு சினிமா ஷூட்டிங் போல இருந்தது என்று விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கரூரில் முதலமைச்சர் விஜயின் நேற்றைய பேச்சு வழக்கமான ஸ்கிரிப்ட் தான் என்றும் புதுமாதிரியான ஒன்றும் இல்லை எனவும் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்தபின் வீட்டுக்கு ஒரு வேலை தருவோம் என்ற தமிழக வெற்றிக்கழகத்தின் வாக்குறுதி என்ன ஆனது என்ற கேள்வி எழுப்பினார்
இதையும் படிங்க: தண்ணீர் கேக்க ஐடியா இருக்கா..? எங்க பேசணுமோ பேசுங்க விஜய்..! TTV தினகரன் சவால்..!
குருவை சாகுபடி கண்ணீர் திறக்காத நிலையில் விவசாய பிரச்சனை குறித்து முதலமைச்சர் விஜய் பேசினாரா என்ற கேள்வி எழுப்பி இருக்கிறார். மக்களுக்காக பணத்தை வழங்கியவர் எம்ஜிஆர் என்றும் ஆனால் அரசியலுக்கு வந்த பின்னர் தான் மக்களுக்கு வழங்கினார் விஜய் எனவும் ஜெயக்குமார் தெரிவித்தார். இடைத்தேர்தலை மனதில் வைத்து தான் முதல் அமைச்சர் விஜய் பேசியுள்ளதாக குற்றம் சாட்டியிருக்கிறார். கோடி கோடியாக சம்பாதித்த விஜய் தனது சொந்த பணத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் கொடுத்திருக்கலாமே என்று கேட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கி இருந்தால் அதன் வட்டியை வைத்து நன்றாக வாழ்ந்திருப்பார்களே என்றும் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார். கடை தேங்காய் எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது போல் அரசு பணியை முதல்வர் விஜய் கேகொடுத்திருப்பதாக ஜெயக்குமார் விமர்சனம் செய்திருக்கிறார். டிஎன்பிஎஸ்சி க்கு படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களை வஞ்சிக்கும் வகையில் முதலமைச்சர் செயல்பாடு இருப்பதாக தெரிவித்தார். ஊழல்வாதிகளை அருகில் வைத்துக்கொண்டே ஊழலை ஒழிப்பதாக முதல்வர் விஜய் பேசுகிறார் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எல்லாத்துக்கும் காரணம் இருக்கு..! CBI பயம் தான்... விஜயின் கரூர் பயணத்தை விமர்சித்த லியோனி..!