• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கட்டுக்கடங்காத கூட்டம்... தாராபுரத்தை திணறடித்த தவெகவினர்... தடுப்புகளை உடைத்தெறிந்து உள்ளே புகுந்து அட்ராசிட்டி...!

    தாராபுரம் மாருதி நகரில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சாரை சாரையாக பொதுமக்களும், தவெக தொண்டர்களும் திரண்டுள்ளனர்.
    Author By Amaravathi Wed, 30 Sep 2026 12:04:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm vijay dharapuram meeting

    தாராபுரத்தில் இன்று நடைபெற உள்ள தேர்தல் பிரச்சாரத்தில், தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து தமிழக முதலமைச்சர் விஜய் விசில் சின்னத்தில் வாக்கு சேகரிக்க உள்ளார்.

    இதற்காக காவல்துறையினர் ஏற்கனவே இரும்புத் தடுப்புகளை அமைத்துள்ளனர். அதன் வழியாகத்தான் தொண்டர்கள் உள்ளே செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், கியூஆர் கோடு வைத்திருக்கும் தொண்டர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், 5,000 நபர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி வழங்கப்படும் என்றும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன.

    ஆனால், தற்போது அந்த கட்டுப்பாடுகளையும் கடந்து சாரை சாரையாக தொண்டர்கள் திரண்டு வரும் காட்சிகளைக் காண முடிகிறது. ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரச்சாரக் கூடாரத்தை நோக்கி சென்று வருகின்றனர். சற்று முன்பாக தடுப்புகளை தூக்கி வீசிவிட்டு, தொண்டர்கள் கூடாரம் அமைக்கப்பட்டுள்ள பகுதியை நோக்கிச் சென்ற காட்சிகளையும் காண முடிந்தது.

    இதையும் படிங்க: கட்டுச்சோற்றில் பெருச்சாளிகள் கம்யூனிஸ்டுகள்!! விஜய் எச்சரிக்கையாக இருக்கணும்!! எச்.ராஜா வார்னிங்!

    திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி, அந்த மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றாகும். குறிப்பாக, அதிமுக வலிமையாக இருக்கக்கூடிய தொகுதிகளில் ஒன்றாகவும் இது உள்ளது. நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதியாக தாராபுரம் உள்ளது. இந்தத் தொகுதியில் அதிமுகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது.

    இந்நிலையில், தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறுமா என்ற கேள்வி தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால், தாராபுரம் தொகுதியைப் பொறுத்தவரை கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக மூன்றாவது இடத்தையே பெற்றிருந்தது. இரண்டாவது இடத்தில் திமுகவும், மூன்றாவது இடத்தில் தவெகவும் வந்திருந்தன.

    எனவே, இந்தத் தொகுதியில் வெற்றி பெறுவது தமிழக வெற்றி கழகத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்படும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் ஒப்பிடும்போது சுமார் 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக மூன்றாவது இடத்தைப் பெற்றிருந்தது. அதே தேர்தலில் திமுக இரண்டாவது இடம் பெற்றிருந்தது.

    அதிமுகவுக்கு பாரம்பரிய வாக்கு வங்கி நிறைந்துள்ள தொகுதிகளில் ஒன்றாகவும், குறிப்பாக மேற்கு மாவட்டத்தில் அதிமுகவின் வெற்றித் தொகுதியாகவும் பார்க்கப்படும் தாராபுரம் தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தற்போது தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக தாராபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    எனவே, தாராபுரம் தொகுதி என்பது மதுராந்தகத்தை காட்டிலும் சற்று சவால் நிறைந்த தொகுதியாக தமிழக வெற்றி கழகத்திற்கு இருக்கக்கூடும் என கூறப்பட்டு வரும் நிலையில், இன்று முதலமைச்சர் விஜய் எவ்வாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    ஏற்கனவே மதுராந்தகத்தில் முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டபோது, மதுராந்தகம் தொகுதிக்கும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் என்ன செய்தது, இனி என்ன செய்யப்போகிறது என்பதையெல்லாம் பட்டியலிட்டு பேசியிருந்தார்.

    இந்நிலையில், மேற்கு மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள இந்தப் பிரச்சாரத்தில் முதலமைச்சர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. கடந்த முறை மதுராந்தகத்தில் முதலமைச்சரின் பிரச்சாரத்தில் திமுகவுக்கு எதிரான விமர்சனங்கள் அதிகமாக இடம்பெற்றிருந்தன.

    தற்போது தேர்தல் பிரச்சாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது. இரண்டு தொகுதிகளிலும் முக்கிய தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் தவெக அரசு மீதும், முதலமைச்சர் விஜய் குறித்தும் நாள்தோறும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

    எனவே, இன்று தாராபுரத்தில் நடைபெற உள்ள பிரச்சாரத்தில் அதிமுக மற்றும் திமுகவை குறித்து முதலமைச்சர் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த நிலையில், தற்போது டிஐஜி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காட்சிகளைக் காண முடிகிறது. முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும், மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளன.

    ஆனால், அந்த கட்டுப்பாடுகளையும் மீறி தொண்டர்கள் சற்று முன்பாக உள்ளே சென்று அமர்ந்துள்ளனர். குறிப்பாக, பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியிலும் ஏராளமான தொண்டர்கள் அமர்ந்திருந்தனர். இதையடுத்து காவல்துறையினர் உள்ளே சென்று, இது பெண் தொண்டர்கள் அமர்வதற்கான பகுதி என்றும், முன்வரிசையில் பெண் தொண்டர்கள் அமர வேண்டும் என்றும் கட்சி தலைமையிடமிருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால், தொண்டர்கள் அந்த வரிசையிலிருந்து பின்வாங்கி சென்று பின்புறத்தில் அமர்ந்தனர்.

    5,000 பேருக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டிருந்தாலும், வழக்கம்போல் இந்த முறையும் முதலமைச்சரை பார்ப்பதற்காக அதைவிட பல மடங்கு தொண்டர்கள் சாரை சாரையாக திரண்டு வருவதை காண முடிகிறது.

    எனவே, தாராபுரத்தில் இன்று நடைபெற உள்ள இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் விஜய் பேச உள்ள கருத்துகள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. அதிமுகவுக்கு எதிரான விமர்சனங்கள் அதிகமாக இருக்குமா, திமுகவை குறிப்பிட்டு என்ன பேசப்போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

    மேற்கு மாவட்டத்தில் பல ஆண்டுகளாக முன்னிலையில் உள்ள கட்சிகள் அந்தப் பகுதிக்கு பெரிய அளவிலான வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வரவில்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை சாயப்பட்டறை ஆலைக் கழிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.

    பின்னலாடை தொழிலில் தமிழகம் முன்னிலையில் இருப்பதற்கு காரணமாக இருக்கும் பகுதிகளில் திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் முக்கியமானவை. இந்நிலையில், திருப்பூரில் பின்னலாடை உற்பத்தியாளர்களுக்காக என்ன மாதிரியான அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

    தேர்தல் பிரச்சாரத்தில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவது சாத்தியமற்றதாக இருந்தாலும், அந்த மாவட்டம் மற்றும் அந்தப் பகுதி மக்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் குறித்தும், புதிதாக ஏதேனும் வாக்குறுதிகள் வழங்கப்படுமா என்பது குறித்தும் முதலமைச்சர் தனது பிரச்சாரத்தில் சுட்டிக்காட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    திருப்பூரைப் பொறுத்தவரை, பெரிய அளவில் பின்னலாடை தொழிலாளர்கள் நிறைந்துள்ள மாவட்டமாக இருப்பதால், அவர்களும் முதலமைச்சரின் இன்றைய வருகையை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கக்கூடும்.

    இந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, தாராபுரம் தொகுதியில் வெற்றி பெறுவதற்கு தமிழக வெற்றி கழகம் தீவிரமாக தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தக் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் தொடர்ந்து தாராபுரம் தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவதை காண முடிகிறது.

    தவெகவைப் பொறுத்தவரை, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாகத்தான் முதலமைச்சர் தொடர்ந்து அரசியல் ரீதியான பயணங்கள், அரசு முறைப் பயணங்கள் என பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணம் செய்து வருகிறார்.

    ஒருபுறம் அண்மையில் மதுராந்தகம் தொகுதிக்கு சென்று முதலமைச்சர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அதன் பிறகு இரண்டு நாட்களுக்கு முன்பாக மதுரைக்கு சென்றிருந்த முதலமைச்சர், அங்கு அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருந்தார்.

    இதையும் படிங்க: மதுராந்தகத்தில் தவெக கூட்டணி தேர்தல் பொதுக்கூட்டம்: அக்டோபர் 1-ல் மாபெரும் பரப்புரை அறிவிப்பு!

    மேலும் படிங்க
    தில்லா திமுகவை எதிர்ப்பது விஜய் தான்..! பச்சை குழந்தை TO பாட்டி வரை என் சொந்தங்கள்..!! முதல்வர் உறுதி.!!

    தில்லா திமுகவை எதிர்ப்பது விஜய் தான்..! பச்சை குழந்தை TO பாட்டி வரை என் சொந்தங்கள்..!! முதல்வர் உறுதி.!!

    தமிழ்நாடு
    "அந்தக் குழந்தையே நீங்க தானே"..! ஓட்டு போடாததற்கு நன்றி சொன்ன ஸ்டாலின்..! கிண்டலடித்த CM விஜய்.!!

    "அந்தக் குழந்தையே நீங்க தானே"..! ஓட்டு போடாததற்கு நன்றி சொன்ன ஸ்டாலின்..! கிண்டலடித்த CM விஜய்.!!

    தமிழ்நாடு
    சுந்தர் பிச்சையை பார்த்து அந்த வார்த்தை சொன்ன டிரம்ப்.. வெள்ளை மாளிகை கூட்டத்தில் பரபரப்பு!!

    சுந்தர் பிச்சையை பார்த்து அந்த வார்த்தை சொன்ன டிரம்ப்.. வெள்ளை மாளிகை கூட்டத்தில் பரபரப்பு!!

    உலகம்
    #BREAKING: கொங்கு நாட்டு தங்கங்களே..! உங்க வீட்டு விஜய்..! தாராபுரத்தில் CM பேச்சால் அதிர்ந்த பிரச்சார மேடை..!

    #BREAKING: கொங்கு நாட்டு தங்கங்களே..! உங்க வீட்டு விஜய்..! தாராபுரத்தில் CM பேச்சால் அதிர்ந்த பிரச்சார மேடை..!

    தமிழ்நாடு
    மீசைய முறுக்கு 2: 5 நாட்களில் பல கோடி வசூலா..!! படத்தின் தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை கேட்டா ஆடிபோயிடுவிங்க..!

    மீசைய முறுக்கு 2: 5 நாட்களில் பல கோடி வசூலா..!! படத்தின் தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை கேட்டா ஆடிபோயிடுவிங்க..!

    சினிமா
    துணிச்சலாக செயல்பட்டு 6 உயிர்களைக் காத்த RPF வீரர்கள்: தெற்கு ரயில்வே ஐ.ஜி. அருள் ஜோதி பாராட்டு!

    துணிச்சலாக செயல்பட்டு 6 உயிர்களைக் காத்த RPF வீரர்கள்: தெற்கு ரயில்வே ஐ.ஜி. அருள் ஜோதி பாராட்டு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தில்லா திமுகவை எதிர்ப்பது விஜய் தான்..! பச்சை குழந்தை TO பாட்டி வரை என் சொந்தங்கள்..!! முதல்வர் உறுதி.!!

    தில்லா திமுகவை எதிர்ப்பது விஜய் தான்..! பச்சை குழந்தை TO பாட்டி வரை என் சொந்தங்கள்..!! முதல்வர் உறுதி.!!

    தமிழ்நாடு

    "அந்தக் குழந்தையே நீங்க தானே"..! ஓட்டு போடாததற்கு நன்றி சொன்ன ஸ்டாலின்..! கிண்டலடித்த CM விஜய்.!!

    தமிழ்நாடு
    சுந்தர் பிச்சையை பார்த்து அந்த வார்த்தை சொன்ன டிரம்ப்.. வெள்ளை மாளிகை கூட்டத்தில் பரபரப்பு!!

    சுந்தர் பிச்சையை பார்த்து அந்த வார்த்தை சொன்ன டிரம்ப்.. வெள்ளை மாளிகை கூட்டத்தில் பரபரப்பு!!

    உலகம்
    #BREAKING: கொங்கு நாட்டு தங்கங்களே..! உங்க வீட்டு விஜய்..! தாராபுரத்தில் CM பேச்சால் அதிர்ந்த பிரச்சார மேடை..!

    #BREAKING: கொங்கு நாட்டு தங்கங்களே..! உங்க வீட்டு விஜய்..! தாராபுரத்தில் CM பேச்சால் அதிர்ந்த பிரச்சார மேடை..!

    தமிழ்நாடு
    துணிச்சலாக செயல்பட்டு 6 உயிர்களைக் காத்த RPF வீரர்கள்: தெற்கு ரயில்வே ஐ.ஜி. அருள் ஜோதி பாராட்டு!

    துணிச்சலாக செயல்பட்டு 6 உயிர்களைக் காத்த RPF வீரர்கள்: தெற்கு ரயில்வே ஐ.ஜி. அருள் ஜோதி பாராட்டு!

    தமிழ்நாடு
    இரு தொகுதிகளிலும் வென்று தளபதிக்கு சமர்ப்பிப்போம்.. உணர்ச்சிபொங்க பேசிய செங்கோட்டையன்!!

    இரு தொகுதிகளிலும் வென்று தளபதிக்கு சமர்ப்பிப்போம்.. உணர்ச்சிபொங்க பேசிய செங்கோட்டையன்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share