நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். இந்த நடவடிக்கை தமிழ்நாட்டின் நீண்டகால நலன்கள், எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தன்மை ஆகியவற்றைப் பாதிக்கும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் 2 சதவீத அடிப்படை பங்குகள் மற்றும் 1 சதவீத கூடுதல் பங்குகள் உள்ளிட்ட மொத்தம் சுமார் 3 சதவீத பங்குகளை 'விற்பனைக்கான சலுகை' மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவு தமிழ்நாடு அரசுக்கு வருத்தம் அளிப்பதாக முதலமைச்சர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், என்.எல்.சி. நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை மேலும் குறைக்கும் எந்த முடிவையும் தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியாக ஆட்சேபிக்கிறது என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தன் தோற்றம், வளர்ச்சி மற்றும் தொடர்ச்சியான செயல்பாடுகள் அனைத்திலும் தமிழ்நாட்டுடன் இரண்டறக் கலந்துள்ளது என்பதை முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். நிறுவனத்தின் தலைமையகம் நெய்வேலியில் அமைந்துள்ளது. அங்கு சுரங்கம்-I, IA, II உள்ளிட்ட முக்கிய பழுப்பு நிலக்கரி சுரங்கச் செயல்பாடுகளும், அனல் மின் நிலையங்களும் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு மக்களின் ஒத்துழைப்புடன், மாநில அரசு வாயிலாகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் பல தசாப்தங்களாக இந்த நிறுவனம் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய முக்கிய பொதுத்துறை நிறுவனத்தில் மாநில அரசுக்கு நியாயமான மற்றும் நீடித்த உரிமை உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தமிழக நிதி நிலை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்... அரசியலில் புதிய விவாதம்!"
என்.எல்.சி. இந்தியா வெறும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் மட்டுமல்ல. எரிசக்தி பாதுகாப்பு, கனிமவள மேம்பாடு மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஈடுபட்டுள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சொத்து என்று முதலமைச்சர் கூறியுள்ளார்
இதையும் படிங்க: NLC பங்கு விற்பனை முடிவை மறுபரிசீலனை செய்க..!! பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்..!!