தமிழக வெற்றிக்கழக அரசு சார்பில் மின்துறையில் கடந்த 25 ஆண்டு கால தகவல்களை வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது வெளிப்படை தன்மையுடன் வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லை என்ற குற்றம் சாட்டினார். மின்சாரத் துறையில் பணியாளர் பற்றாக்குறை என்கிறார்கள் என்றும் இதே பணியாளர்களை வைத்துதான் திமுக ஆட்சியில் பணி செய்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதே பணியாளர்களை வைத்துதான் தமிழ்நாடு முழுவதும் சீரான மின்சாரம் கொடுத்தோம் என்றும் விளக்கம் கொடுத்துள்ளார். 343 நபர்களுக்கு புதிதாக பணி கொடுத்தோம் என்கிறார்கள் என்றும் தமிழக வெற்றிக்கழக அரசின் 40 நாட்களில் இவர்கள் தீர்வு செய்யப்பட்டார்களா எனவும் கேள்வி எழுப்பினார். 40 நாட்களில் தீர்வு நடத்தி 343 நபர்களை பணிக்கு தேர்வு செய்தீர்களா என்றும் அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

திமுக ஆட்சியில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தான் இப்போது பணி வழங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.. தேர்தல் வரவில்லை என்றால் நாங்களே பணி நியமன ஆணைகளை வழங்கி இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார். டிப்ளமோ முடித்தவர்கள் 656, ஐடிஐ படித்தவர்களில் 1795 பேரை டிஎன்பிஎஸ்சி மூலம் தீர்வு செய்ததாகவும் அடுத்ததாக அவர்களுக்கு பணியாணை வழங்கப்பட இருந்ததாகவும் தெரிவித்தார். திமுக ஆட்சியில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு அடுத்ததாக பணியாளை கொடுப்பீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "செந்தில் பாலாஜி ஒன்னுமே செய்யல"..! வெறும் அறிவிப்புதான்... அமைச்சர் நிர்மல் குமார் பகிரங்க குற்றச்சாட்டு..!!
தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் மின்வாரியத்தில் 300 பேருக்கு பதவி உயர்வு வழங்கியதாக கூறுகிறார்கள் என்றும் தமிழக வெற்றி கழக ஆட்சியாள்தான் பதவி உயர்வு என்கிறார்கள் ஆனால் திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் தேதி மாறாமல் பதவி உயர்வு தரப்பட்டது என்ற விவரத்தையும் குறிப்பிட்டுள்ளார். 300 பேருக்கும் திமுக ஆட்சியில் தான் பதவி உயர்வு தரப்பட்டது என்றும் தேர்தல் வந்தால் நடைமுறைப்படுத்த முடியவில்லை எனவும் செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு செக்... கரூர் முக்கிய புள்ளி வீட்டில் சோதனை... காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த விஜய்...!